கிரேட் ஸ்காலர்ஷிப்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிரேட் ஸ்காலர்ஷிப்!

Added : ஜூலை 21, 2021
Share
பிரிட்டனில் படிக்க சிறந்த வாய்ப்பை'கிரேட் ஸ்காலர்ஷிப்' திட்டத்தின் அந்நாட்டு அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி யு.கே.,வில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களால் உயர்கல்வியை பெற முடியும்.கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இந்த உயர்கல்வி வாய்ப்பை பெறலாம். கிரேட் ஸ்காலர்ஷிப் திட்டத்தில்

பிரிட்டனில் படிக்க சிறந்த வாய்ப்பை'கிரேட் ஸ்காலர்ஷிப்' திட்டத்தின் அந்நாட்டு அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி யு.கே.,வில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களால் உயர்கல்வியை பெற முடியும்.கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இந்த உயர்கல்வி வாய்ப்பை பெறலாம். கிரேட் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் கிட்டத்தட்ட 60 வகையான உதவித்தொகை வழங்கப்படுகிறது.தகுதிகள்:இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள அதற்குரிய படிப்பு மற்றும் துறைக்கு ஏற்ப இளநிலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை திட்டத்தில் பங்குபெறும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் மாணவர் சேர்க்கையை பெற வேண்டும். யு.கே., உயர்கல்வி நிறுவனங்கள் வரையறுத்துள்ள ஆங்கில புலமையை பெற்றிருப்பது அவசியம்.இந்தியாவுக்காக பட்டியலிட்டுள்ள பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து அதன் இணையதளத்தின், ஸ்காலர்ஷிப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தனிப்பட்ட முறையில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு: www.britishcouncil.in/study-uk/scholarships/great-scholarships

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X