பொது செய்தி

தமிழ்நாடு

'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட்'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வெளிநாட்டு வணிகம் சார்ந்த கல்வியை வழங்கும் நோக்கில் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனம், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட்'புதுடில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் செயல்படும் இக்கல்வி நிறுவனம், இதுவரை 30 நாடுகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களுக்கு மேலாண்மை சார்ந்த கல்வியை வழங்குகியுள்ளது என்பது

வெளிநாட்டு வணிகம் சார்ந்த கல்வியை வழங்கும் நோக்கில் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனம், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட்'புதுடில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் செயல்படும் இக்கல்வி நிறுவனம், இதுவரை 30 நாடுகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களுக்கு மேலாண்மை சார்ந்த கல்வியை வழங்குகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.படிப்புகள்:பிஎச்.டி., - மேனேஜ்மெண்ட் புரொகிராம் மார்க்கெட்டிங், ஜெனரல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஸ்ட்ரேட்டஜி, பினான்ஸ், ஆப்ரேஷன்ஸ் அண்ட் சப்ளை சயின் மேனேஜ்மெண்ட் மற்றும் ஐ.டி. இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் ஆகிய பிரிவுகளில் பகுதி மற்றும் முழு நேர படிப்பாக வழங்கப்படுகிறது.தகுதிகள்: உரிய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.எம்.பி.ஏ., - இன்டர்நேஷனல் பிசினஸ் தகுதிகள்: வார இறுதிநாட்களில் வழங்கப்படும் இப்படிப்பில் சேர்க்கை பெற இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. மேலும், குறைந்தது 3 ஆண்டுகள் மேலாண்மை சார்ந்த துறையில் பணி அனுப்வம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சர்ட்டிபிகேட் புரொகிராம் இன் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் மேனெஜ்மெண்ட் முற்றிலும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் இப்படிப்பில் இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், இன்டர்நேஷனல் டிரேட் ஆப்ரேஷன்ஸ் அண்ட் டாக்குமெண்டேஷன், பாரின் டிரேட் அண்ட் பாலிசி, இன்டர்நேஷனல் டிரேட் பினான்ஸ், கஸ்டம் ரெகுலேஷன்ஸ் அண்ட் இம்போர்ட் புரொசீஜர்ஸ் ஆப் இந்தியா மற்றும் இன்டர்நேஷனல் டிரேட் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை:ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு: www.iift.edu

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X