பொது செய்தி

தமிழ்நாடு

சட்டம் படிக்க 'கிளாட்!'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் சட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் அவசியம் எழுதவேண்டிய நுழைவுத் தேர்வு 'கிளாட்' எனும் 'காமன் லா அட்மிஷன் டெஸ்ட்'. நாடு முழுவதிலும் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட இதர கல்வி நிறுவனங்கள், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன். இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற கிளாட்-

நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் சட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் அவசியம் எழுதவேண்டிய நுழைவுத் தேர்வு 'கிளாட்' எனும் 'காமன் லா அட்மிஷன் டெஸ்ட்'. நாடு முழுவதிலும் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட இதர கல்வி நிறுவனங்கள், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன். இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற கிளாட்- யு.ஜி., தேர்வும், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற கிளாட் -பி.ஜி., தேர்வும் எழுத வேண்டும்.படிப்புகள்: எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.எம்.,தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்பான எல்.எல்.பி., படிப்பில் சேர 12ம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.முதுநிலை பட்டப்படிப்பான எல்.எல்.எம்., படிப்பில் சேர்க்கை பெற எல்.எல்.பி., அல்லது பி.எல்., படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு படிப்புகளிலும், எஸ்.சி., / எஸ்.டி., மாணவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்கள் விலக்கு உண்டு. கிளாட் தேர்வை எழுத அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.கிளாட் -யு.ஜி., தேர்வில் மொத்தம் 150 அப்ஜெக்டிவ் வடிவிலான கேள்விகளும், கிளாட் பி.ஜி., தேர்வில் மொத்தம் 100 அப்ஜெக்டிவ் வடிவிலான கேள்விகளும் இடம்பெறும்.விபரங்களுக்கு: https://consortiumofnlus.ac.in/

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X