பொது செய்தி

தமிழ்நாடு

வாய்ப்பு தரும் டி.ஐ.ஏ.டி.,

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மத்திய அரசின் கீழ், புனேவில் செயல்படும் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்று, 'டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி'. 1952ம் ஆண்டு 'இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ம்மெண்ட் டெக்னாலஜி' (ஐ.ஏ.டி.,) என்கிற பெயரில் துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், 2006ம் ஆண்டு தற்போதைய, 'டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி' (டி.ஐ.ஏ.டி.,) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ.,

மத்திய அரசின் கீழ், புனேவில் செயல்படும் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்று, 'டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி'. 1952ம் ஆண்டு 'இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ம்மெண்ட் டெக்னாலஜி' (ஐ.ஏ.டி.,) என்கிற பெயரில் துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், 2006ம் ஆண்டு தற்போதைய, 'டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி' (டி.ஐ.ஏ.டி.,) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ராணுவ தொழில்நுட்பம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகளை கடந்த 40 ஆண்டுகளாக வழங்கி வருவதோடு மட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இக்கல்வி நிறுவனம், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.படிப்புகள்: எம்.எஸ்சி., -புட் டெகனாலஜி மற்றும் பிஎச்.டி., படிப்புகள்.எம்.எஸ்சி., படிப்பிற்கு, புட் சயின்ஸ், புட் டெக்னாலஜி, நியூட்ரிஷன், இன்ஜினியரிங், சயின்சஸ், அக்ரிகல்ச்சர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு தேசிய அளவிலான தகுதித்தேர்விலும் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவர்களின் கல்வித் திறனிற்கு ஏற்ப உதவித்தொகைகளும் வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை முறை: கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.விபரங்களுக்கு: https://diat.ac.in/

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X