பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை வழியாக சென்னை - கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவது எப்போது

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
மதுரை : மதுரை, திருநெல்வேலி வழியாக சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் 2019 பிப்., 15ல் டில்லி - வாரணாசி இடையே துவக்கப்பட்டது. டில்லியில் புறப்படும் இந்த ரயில் கான்பூர், அலகாபாத் வழியாக வாரணாசி சென்று அதே நாளில் டில்லி

மதுரை : மதுரை, திருநெல்வேலி வழியாக சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.latest tamil newsநாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் 2019 பிப்., 15ல் டில்லி - வாரணாசி இடையே துவக்கப்பட்டது. டில்லியில் புறப்படும் இந்த ரயில் கான்பூர், அலகாபாத் வழியாக வாரணாசி சென்று அதே நாளில் டில்லி திரும்புகிறது. எட்டு மணி நேரத்தில்760 கி.மீ., துாரத்தை கடக்கிறது. 2வது வந்தே பாரத் ரயில் டில்லி - கத்ரா ஸ்டேஷன்கள் இடையே இயக்கப்பட்டது.

தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள், சென்சாரில் இயங்கும் குடிநீர் குழாய்கள், முழுமையான குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயிலில் வைபை வசதி உள்ளது. ரயிலில் காற்றை கிழித்து செல்லும் வகையில் விமானத்தை போன்ற வடிவமைப்பு இருக்கும்.ஸ்டேஷன்களில் ரயிலை உடனடியாக நிறுத்த முடியும். வந்தே பாரத் ரயில் ஒன்று தலா ரூ.100 கோடி மதிப்பில் வடிவமைக்கப்படுகின்றன.


latest tamil newsதற்போது சென்னை - மதுரை வரை மின்மயமாக்கத்துடன் இரட்டை அகல ரயில் பாதை உள்ளது. மதுரை - கன்னியாகுமரி வரை பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் இந்த நிதியாண்டிற்குள் முடிக்கப்படவுள்ளன. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தேஜஸ் ரயிலை தவிர ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, டபுள்டக்கர், ஜனசதாப்தி போன்ற அதி விரைவு ரயில்கள் இல்லை.சமூக ஆர்வலர்பாண்டியராஜா கூறியதாவது: சென்னை- மதுரை இடையே வேகமாக ரயில்களை இயக்கும் வகையில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.


latest tamil newsகன்னியாகுமரி வரையில் இரட்டை பாதை பணிகளை விரைந்து முடித்து சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கினால் தென் மாவட்ட பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
21-ஜூலை-202112:54:33 IST Report Abuse
sridhar குமரியில் மட்டுமே சூரிய உதய அஸ்தமனம் இரண்டும் பார்க்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக அரசு இது போன்ற ஏற்பாடு செய்யவேண்டும். ஐம்பதாயிரம் கோடியில் திட்டம் போட வேண்டும். கடல் கட்டும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் OPS மிக இணக்கமாக இருந்தும் அவரது போடிநாயக்கனுர் ரயில் எப்போது வருமோ? PM MODI INAUGURATED A HOST OF OTHER PROJECTS, INCLUDING A FIVE-STAR HOTEL ATOP THE REDEVELOPED GANDHINAGAR RAILWAY STATION ON FRIDAY PRIME MINISTER NARENDRA MODI ON FRIDAY VIRTUALLY INAUGURATED A REVAMPED VADNAGAR RAILWAY STATION WHERE HE USED TO SELL TEA DURING HIS CHILDHOOD. VADNAGAR IN GUJARAT'S MEHSANA DISTRICT IS MODI'S HOMETOWN. APART FROM THE REFURBISHED RAILWAY STATION, MODI INAUGURATED A HOST OF OTHER PROJECTS, INCLUDING A FIVE-STAR HOTEL ATOP THE REDEVELOPED GANDHINAGAR RAILWAY STATION AND SOME NEW ATTRACTIONS AT SCIENCE CITY IN AHMEDABAD
Rate this:
Cancel
K Sukumar - Nagpur,இந்தியா
21-ஜூலை-202111:25:19 IST Report Abuse
K Sukumar Why don't demand Nagpur to Kanniyakumari Express Tri-weekly
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்., - தமிழகம்,இந்தியா
21-ஜூலை-202111:58:49 IST Report Abuse
தமிழ்வேள்வெகு நாட்களாகவே இந்த கோரிக்கை கிடப்பில் இருக்கிறது - நாக்பூர் - கன்யாகுமரி , வழி -ஹைதெராபாத் ,பெங்களூரு, சேலம், மதுரை, திருநெல்வேலி, - சென்ட்ரல் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்க கோரிய கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை ..இந்த தடத்தில் தினசரி ரயில் அவசியமான ஒன்று .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X