பொது செய்தி

இந்தியா

மரங்களை வெட்டி அகற்றுவதில் வெளிப்படை இல்லை; மக்கள் அதிருப்தி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : பி.எம்.ஆர்.சி.எல்., எனப்படும், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம், மரங்களை வெட்டி அகற்றுவதில் வெளிப்படை தன்மையுடன் செயல்படாமல் இருப்பதால், மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ இணைப்புகளை செயல்படுத்த, சில பகுதிகளில் மரங்களை அப்புறப்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி கேட்டு வருகிறது.ஆனால், திட்டத்தை

பெங்களூரு : பி.எம்.ஆர்.சி.எல்., எனப்படும், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம், மரங்களை வெட்டி அகற்றுவதில் வெளிப்படை தன்மையுடன் செயல்படாமல் இருப்பதால், மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ இணைப்புகளை செயல்படுத்த, சில பகுதிகளில் மரங்களை அப்புறப்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி கேட்டு வருகிறது.ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்கு முறையான திட்டமிடுதல் இல்லாமல், அவ்வப்போது விட்டு விட்டு மரங்களை அகற்றுவதால், மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம், சில வாரங்களுக்கு முன் சில்க் போர்டிலிருந்து கே.ஆர்.,புரம் வரை, 19.6 கி.மீ.,க்கு மெட்ரோ பாதை அமைக்க, 1,859 மரங்களை அகற்றுவதற்கு, மாநில வனத்துறை மற்றும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது.சில நாட்களுக்கு முன், வன பாதுகாவலர்கள், பெங்களூரு புறநகர் மாவட்ட நிர்வாகத்திடம், 256 மரங்களை அகற்றுவதற்கு அனுமதி கோரினர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கையின் படி, 1,248 மரங்கள் மட்டுமே அகற்றப்படும் என தகவல் வழங்கியது.ஆனால், சமீபத்தில், 2,000 மரங்கள் அப்புறபடுத்த வேண்டி வரும் என, பி.எம்.ஆர்.சி.எல்., தகவல் அளித்துள்ளது.இதில் எதை நம்புவது என மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதுடன், திட்டத்தில் தெளிவான அறிவிப்பு இல்லாததால் அதிருப்தியில் உள்ளனர்.

மேம்பாட்டு திட்டங்களுக்கு மரங்களை அப்புறப்படுத்தி வேண்டி வருவது குறித்து வெளிப்படை தன்மையை பின்பற்றினால் மட்டுமே எல்லாருக்கும் நம்பிக்கை ஏற்படும்.ஒரு திட்டமிடுதல் இல்லாமல் அவ்வப்போது குறிப்பிட்ட எண்ணிக்கை மரங்கள் அப்புறப்படுத்தப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மோசமாக்கி விடும்.மரங்களின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். இதுதொடர்பாக பி.எம்.ஆர்.சி.எல். முறையான அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X