பொது செய்தி

இந்தியா

'குடிநீர் ஆதாரமில்லாத இடத்தில் 'ஜல்ஜீவன்' திட்டத்தால் பலனில்லை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'குடிநீர் ஆதாரமில்லாத இடத்தில், 'ஜல்ஜீவன்' திட்டத்தை செயல்படுத்தி பலன் பெற முடியாது' என, மாநில ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையினர் தெரிவித்தனர்.கர்நாடகாவில், 91.12 லட்ச குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, மாநிலத்தில், 30 லட்சம் இணைப்புகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.பணிகளை துரிதப்படுத்த, மத்திய அரசு

பெங்களூரு : 'குடிநீர் ஆதாரமில்லாத இடத்தில், 'ஜல்ஜீவன்' திட்டத்தை செயல்படுத்தி பலன் பெற முடியாது' என, மாநில ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையினர் தெரிவித்தனர்.

கர்நாடகாவில், 91.12 லட்ச குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, மாநிலத்தில், 30 லட்சம் இணைப்புகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.பணிகளை துரிதப்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மாநில அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் கூறியதாவது;குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எண்ணிக்கையை மட்டுமே, மத்திய அரசு பார்க்கிறது.இணைப்புகள் வழங்கப்படுவதால் குடிநீர் வினியோகம் இருக்குமா என்பதை கண்டுகொள்வதில்லை.குடிநீர் ஆதாரமே இல்லாத இடத்தில் இணைப்பு வழங்குவதில் எந்த பயனும் இல்லை. மாநில அரசுடன் கலந்தோசிக்காமல் மத்திய அரசு திட்டத்துக்கான இலக்கையும் வழங்கி, நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

தகவல் படி, மத்திய அரசின், 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், மாநில அரசு, 398 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளது.சில இடங்களில் போர்வெல் அமைப்பதற்கான சாத்தியமும் இல்லை. இவ்வாறுள்ள இடங்களில் திட்டத்தை செயல்படுத்துவது தேவையில்லாதது.கோலார், சிக்கபல்லாப்பூர், பெங்களூரு புறநகர், பெங்களூரு மாவட்டங்களில் போர்வெல் 1,200 - 1,600 அடி வரை போட வேண்டியுள்ளது.இதற்கான செலவு தொகை அதிகம் தான். வரும் மூன்றாண்டுகளில் இப்பணிகளுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் தேவையாக உள்ளது.

சராசரியாக ஒரு ஆண்டுக்கு திட்டப்பணிகளை மேற்கொள்ள, 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டும்.திட்டத்தை முடிப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் வேண்டும். குழாய் இணைக்கப்படும் பணிகளுக்கு முன, அந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் வழங்குவதை மாநில அரசு உறுதி செய்தால் மட்டுமே திட்டத்தை செயல்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X