பொது செய்தி

இந்தியா

தங்கவயல் நீதிமன்றத்தில் ஆக., 14ல் மெகா 'லோக் அதாலத்'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தங்கவயல் : ''தங்கவயல் நீதிமன்றத்தில் ஆக., 14ல் மெகா, 'லோக் அதாலத்' நடக்கும்,'' என, தங்கவயல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி பவனேஷ் தெரிவித்தார்.தங்கவயலில் அவர் அளித்த பேட்டி:நீதிமன்றங்களில் தேக்கமாகியுள்ள வழக்குகளை எளிதில் தீர்வுக்கான, 'லோக் அதாலத்' ஆக., 14ல் நடத்தப்பட உள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவின் படி, சட்ட சேவை அமைப்பு ஏற்பாட்டில், லோக் அதாலத்

தங்கவயல் : ''தங்கவயல் நீதிமன்றத்தில் ஆக., 14ல் மெகா, 'லோக் அதாலத்' நடக்கும்,'' என, தங்கவயல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி பவனேஷ் தெரிவித்தார்.

தங்கவயலில் அவர் அளித்த பேட்டி:நீதிமன்றங்களில் தேக்கமாகியுள்ள வழக்குகளை எளிதில் தீர்வுக்கான, 'லோக் அதாலத்' ஆக., 14ல் நடத்தப்பட உள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவின் படி, சட்ட சேவை அமைப்பு ஏற்பாட்டில், லோக் அதாலத் நடக்கிறது.

மோட்டார் வாகனம், செக் மோசடி, தொழிலாளர் பிரச்னை, மின் கட்டணம், குடிநீர் கட்டணம், குடும்ப நலன், சில கிரிமினல் வழக்குகள் நிலுவையில் தீர்க்கப்படாமல் உள்ளன.இவைகளுக்கு விரைவாக தீர்வு காண இருதரப்பினரையும் வரவழைத்து, விரைந்து முடிக்க இந்த மெஹா லோக் அதாலத் பயனுள்ளதாக இருக்கும்.

முதன் முறையாக குற்றம் செய்தவர்கள் திருந்தவும் சட்டத்தில் வாய்ப்புள்ளது. குடிநீர், மின் கட்டண வழக்கு விவகாரமாக துறை அதிகாரிகளை வரவழைத்து, தவணை முறையில் கட்டணம் செலுத்தவும் வாய்ப்பு கிடைக்கலாம்.இதன் மூலம் யாரும் பயப்பட தேவையில்லை. பாதுகாப்பும், தீர்வும் கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது.

கோலார் மாவட்டத்தில், 41 ஆயிரம் வழக்குகளும், தங்கவயல் நீதிமன்றத்தில் 6,000 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.நீதிபதிகள் மகேஷ், மஞ்சுநாத், கிரண் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X