இந்தியா

'டிமாண்ட்' கட்டணம் ரத்து செய்ய கட்டணம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மின் கட்டணத்தில் 'டிமாண்ட்' கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என, நேரு வீதி வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.புதுச்சேரி, நேரு வீதி வணிகர் சங்க துணைத் தலைவர் இசைக்கலைவன் மற்றும் நிர்வாகிகள், மின் துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அளித்துள்ள மனு:புதுச்சேரியில் தற்போது மின் கட்டணத்துடன் புதிதாக 'டிமாண்ட்' கட்டணம் சேர்த்து ரசீது வழங்கப்பட்டு

புதுச்சேரி : மின் கட்டணத்தில் 'டிமாண்ட்' கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என, நேரு வீதி வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி, நேரு வீதி வணிகர் சங்க துணைத் தலைவர் இசைக்கலைவன் மற்றும் நிர்வாகிகள், மின் துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அளித்துள்ள மனு:புதுச்சேரியில் தற்போது மின் கட்டணத்துடன் புதிதாக 'டிமாண்ட்' கட்டணம் சேர்த்து ரசீது வழங்கப்பட்டு வருகிறது.உயர் அழுத்த மின் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டு வந்த டிமாண்ட் கட்டணம், தற்போது குறைந்த மின் அழுத்த பயன்பாட்டாளர்களுக்கும் விதிக்கப்படுகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வருமானம் இழந்துள்ளனர். பெரும்பாலான வணிக நிறுவனங்கள் தங்களது நிதி சுமையை சரி செய்ய இயலாமல் தவிக்கின்றன.

இந்நிலையில் அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சொத்து வரி, தொழில் உரிமம் வரி போன்றவற்றிற்கு கூடுதல் வரி விதிப்பதை தவிர்க்க வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவிட வேண்டும். குறைந்த மின்ன ழுத்த நுகர்வோர்களுக்கு டிமாண்ட் கட்டணத்தை ரத்து செய்து, பழைய முறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X