பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம். 1

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பைக்குள்ளே மரச்சாமி!ஸ்பெஷல் பிளைட்ல முதல்வரே, கேப்பிடல் சிட்டி போனாரே, அப்போது ஆறு பைகளை எடுத்துக்கிட்டு போனாருன்னு 'மாஜி' கண்டுபிடிச்சி சொன்னாரு.அதுல என்ன இருந்ததுன்னு பல சந்தேகங்கள் எழுந்தது. ஆளுக்காளு கதைகளை ஜோடிச்சாங்க.பதவியை தக்க வைக்க ரொக்கம் பாய்ந்ததுன்னு சொன்னாங்க. ஆனால் அது இல்லையாம்.டெல்லி தலைவர்களுக்கு மரத்தாலே செய்யப்பட்ட சாமி சிலைகளை


பைக்குள்ளே மரச்சாமி!


ஸ்பெஷல் பிளைட்ல முதல்வரே, கேப்பிடல் சிட்டி போனாரே, அப்போது ஆறு பைகளை எடுத்துக்கிட்டு போனாருன்னு 'மாஜி' கண்டுபிடிச்சி சொன்னாரு.அதுல என்ன இருந்ததுன்னு பல சந்தேகங்கள் எழுந்தது. ஆளுக்காளு கதைகளை ஜோடிச்சாங்க.

பதவியை தக்க வைக்க ரொக்கம் பாய்ந்ததுன்னு சொன்னாங்க. ஆனால் அது இல்லையாம்.டெல்லி தலைவர்களுக்கு மரத்தாலே செய்யப்பட்ட சாமி சிலைகளை அன்பளிப்பா கொண்டு போயிசேர்த்தாராம்.இதுக்கு போயி, ஓவரா பில்டப் கொடுத்துட்டாங்கன்னு உள்ளூரு பூக்காரங்க பேசிக்கிறாங்க.


பாசக்கார அண்ணன் புது பாசம்!


'மாஜி' சி.எம்., ரெண்டு பிள்ளைகளை அரசியலில் ஈடுபட செய்தாரு. இதுல இரண்டு பேருமே சட்டசபை பார்த்தவங்க தான். இதுல ஒருத்தரு மந்திரியா கூட ஆனாரு.'மாஜி' அசம்பிளிகாரரான இளையவரு புல்லுக்கட்டு கூட்டத்துல இருப்பவரு, கைக்கூட்டத்திற்கு மாறப் போறாரு. இவரு புதுசா வீடு ஒண்ணு கட்டுறாரு. இது சட்டவிரோதமான கட்டடமாம்.இதை இடித்து தள்ளணுமுன்னு பாசக்கார அண்ணனே, ஒத்தை காலில் நின்னு புகார் கொடுத்திருக்காரு.


தாடிக்கு பின்னால் சீக்ரெட்!

நம்ம பி.எம்., அவரோட ஸ்டைலுக்கு விதவிதமா கோட்டு சூட்டு போட்டாரு. விருப்பப்பட்டு முடி வளர்த்தாரு. அவரோட திறமை, உலகளவுல பேசப்படுறாரு.புலியை பார்த்து சூடு போட்டுக்கிற கதையா,லஇவரை பாலோ செய்றதா, விஜயபுரா பூக்காரஅசம்பிளிக்காரர், பி.எம்., ஸ்டைல்ல தாடி வளர்க்கிறாரு.தாடியோட சீக்ரெட் என்னனு சிலர் கேட்டிருக்காங்க. இதற்கு இம்மாதம் 30 க்குள் சரியான பதில் கிடைக்குமென 'பிட்டு' போட்டிருக்காரு. அதென்ன சீக்ரெட்டோ.


பாடம் படிக்க போனாங்க!

மாஜி சி.எம்., பிளஸ் மாநில தலைவரு ரெண்டு பேரையும் டெல்லிக்கு சொன்னாரு, அவங்க தலைமை 'மாஜி'. ஒருநாள் முன்னதாகவே, கேப்பிடல் சிட்டியில் இவங்க ஆஜராயிட்டாங்க. கர்நாடகா பவன்ல, கைக்கார மேல் மட்ட தலைவர்களோட மாஜி சி.எம்., ரகசியமா உள்குத்து வேலைகளை செய்து முடிச்சிருக்காரு.

இந்த கசமுசா ரகசியங்கள், மாநில தலைவருக்கு தலை வலியை ஏற்படுத்திருக்கு. மாஜி சி.எம்., கெத்தா, லீடர் குவாலிட்டியை காட்டியிருக்காரு. ஒற்றுமையோட ரெண்டு பேரும், 'ஒர்க்' பண்ணணும். 150 இடம் கெடைக்கணும். மெஜாரிட்டியோட ஆட்சியை பிடிக்கணும். அதுதான் இப்போதைக்கு முக்கியமுன்னு பாடம் நடத்தி இருக்காரு.

பெரிய ரகசியம் ஒண்ணுமே இல்லியாம். ஆனாலும் சும்மா ஆதரவாளர்களை துாண்டி விடாதீங்க. ஆபத்தை ஏற்படுத்தாதீங்கன்னு பாடம் நடத்தினாராம் டெல்லி தலைவரு.பூத் கமிட்டி முதல் ஸ்டேட் கமிட்டி வரை புது புது ஆளுங்களுக்கு வாய்ப்பு கொடுக்கண்ணு உபதேசம் செய்திருக்காரு!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X