பொது செய்தி

இந்தியா

பதவியிறக்கம் செய்யப்படுகிறாரா எடியூரப்பா; 50க்கும் மேற்பட்ட வீரசைவ லிங்காயத் மடாதிபதிகள் ஆதரவு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை பதவியிலிருந்து இறக்குவதற்கு, பா.ஜ., மேலிடம் முடிவு செய்திருப்பதாக வந்த தகவலையடுத்து, 50க்கும் மேற்பட்ட வீரசைவ லிங்காயத் மடாதிபதிகள், நேற்று முதல்வரை சந்தித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். 'எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கினால், கர்நாடகாவில், பா.ஜ., சர்வநாசம் ஆகிவிடும்' என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பதவியிறக்கம் செய்யப்படுகிறாரா எடியூரப்பா; 50க்கும் மேற்பட்ட வீரசைவ லிங்காயத் மடாதிபதிகள் ஆதரவு

பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை பதவியிலிருந்து இறக்குவதற்கு, பா.ஜ., மேலிடம் முடிவு செய்திருப்பதாக வந்த தகவலையடுத்து, 50க்கும் மேற்பட்ட வீரசைவ லிங்காயத் மடாதிபதிகள், நேற்று முதல்வரை சந்தித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

'எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கினால், கர்நாடகாவில், பா.ஜ., சர்வநாசம் ஆகிவிடும்' என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், முடிவு எடுக்க முடியாமல், பா.ஜ,. தலைமை திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை பதவியிலிருந்து இறக்குவதற்கு, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாக சில நாட்களாக, பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த வாரம் டில்லி சென்ற முதல்வர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.'ஆடியோ' சர்ச்சைஅதன் பின், தன்னை ராஜினாமா செய்யும்படி யாரும் வலியுறுத்தவில்லை என்றும், நானும் செய்ய மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

முதல்வர், பெங்களூரு வந்த மறுநாளே, 'எடியூரப்பாவை மாற்றி, புதியவர் வருவார். முக்கிய அமைச்சர்கள் நீக்கப்படுவர்' என மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியதாக கூறப்பட்ட, 'ஆடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, முதல்வர் மாற்றம் குறித்த விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதற்கு ஏற்ப, நொடிக்கு நொடி அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.


மடாதிபதிகள் ஆதரவு


எடியூரப்பா சார்ந்த, வீரசைவ லிங்காயத் மடாதிபதிகள், 50க்கும் அதிகமானோர் முதல்வர் இல்லத்துக்கு நேற்று திடீரென வந்து, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். 'எந்த காரணத்தை முன்னிட்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கூடாது; உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்' என்று தைரியமூட்டினர்.

எடியூரப்பாவை சந்தித்த பின், பாலேஹொசூர் மடாதிபதி திங்காலேஸ்வரா சுவாமிகள் கூறியதாவது:முதல்வர் எடியூரப்பா சிறப்பாக ஆட்சியை நிர்வகிக்கிறார். அவரை பதவியில் இருந்து இறக்கினால், கர்நாடகாவில் பா.ஜ., சர்வ நாசம் ஆகிவிடும். இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர் முதல்வராக தொடர வேண்டும்.

அவர் இந்த ஆட்சி காலம் முழுவதும் முதல்வராக இருக்க அனுமதிக்க வேண்டும். இதற்கிடையில், அடுத்த தலைவரை அக்கட்சி தேர்வு செய்து, எடியூரப்பாவின் ஆலோசனையின்படி நடந்து கொள்ள வேண்டும்.இன்னும், இரண்டு நாட்களில், 500 - 600 மடாதிபதிகளுடன் மீண்டும் பெங்களூரு வந்து பெரிய அளவில் ஆலோசனை நடத்தி எங்கள் ஆதரவு தெரிவிப்போம்.

வெறும் வீரசைவ லிங்காயத் சமுதாயத்துக்கு மட்டும் எடியூரப்பா சொந்தமானவர் அல்ல. அவர் அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்லும் முதல்வர். அவரை மாற்றும் முயற்சியால் ஏற்படும் விளைவுகளை பா.ஜ., சந்திக்கும்.கட்சி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர் அவர். அனைவரிடமும் அன்பாக பழகி, மதச்சார்பற்ற தலைவராக விளங்குகிறார்.

இதற்கு முன், எடியூரப்பாவை நீக்கிய போது, பா.ஜ., சந்தித்த விளைவு என்னவென்று கட்சி தலைமைக்கு நன்றாக தெரியும். கட்சி தலைமை சொல்வது போல, மாநில மக்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.மத்தியில் உள்ள தலைவர்கள், மாநில தலைவர்களை விட, முதல்வர் தான் கட்சியின் மூத்த தலைவர் என்பதை அனைவரும் அறிவர்.இவ்வாறு அவர் கூறினார்.ஆங்காங்கே கூட்டம்இது போல, சித்ரதுர்கா முருகா மடாதிபதி சிவமூர்த்தி சரணரு தலைமையில், 20க்கும் அதிகமான மடாதிபதிகள்; கோலாரில், பெல்லாவி மடாதிபதி மஹந்தலிங்கேஸ்வரா சுவாமிகள் தலைமையில், 10க்கும் அதிகமான மடாதிபதிகள், முதல்வருக்கு ஆதரவாக ஆலோசனை நடத்தினர்.

கர்நாடகாவில், 3,200க்கும் அதிகமான வீரசைவ லிங்காயத் மடங்கள் செயல்படுகின்றன. அவர்கள் அனைவருமே முதல்வருக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.இந்நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து, திடமான முடிவு எடுக்க முடியாமல், பா.ஜ., தலைமை திணறும் நிலை ஏற்பட்டுள்ளதுரகசிய சந்திப்பு நடத்தியது ஏன்?முதல்வர் மாற்றம் குறித்த தகவல் வெளியாகி கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ், ம.ஜ.த.,விலிருந்து வெளியேறி, பா.ஜ.,வில் இணைந்த தலைவர்கள், பெங்களூரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று ரகசிய சந்திப்பு நடத்தினர். அப்போது, எடியூரப்பாவை நம்பி, பா.ஜ.,வுக்கு வந்ததால், அவருக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


யாருக்கு முக்கியத்துவம்?


வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கினால், அச்சமுதாயத்தினரின் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்று, பா.ஜ., தலைமைக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதே சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கலாமா அல்லது பிராமண சமுதாயத்தை சேர்ந்த, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு பொது செயலர் சந்தோஷ், மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோரது பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X