இந்தியா

பிளாஸ்டிக் குடோனுக்கு 'சீல்'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி லுாயி பிரகாசம் வீதியில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குடோனுக்கு, மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதை மீறி, சில கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்

புதுச்சேரி : புதுச்சேரி லுாயி பிரகாசம் வீதியில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குடோனுக்கு, மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதை மீறி, சில கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.அதுபோன்ற கடைகளில் மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

அதுகுறித்து வழக்குப் பதிவும் செய்யப் படுகிறது.இந்நிலையில், புதுச்சேரி லுாயி பிரகாசம் வீதியில் உள்ள குடோனில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைத்து, விற்பனை செய்வதாக புகார் வந்தது

இதுகுறித்து, ஆய்வு செய்ய, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் இயக்குனர் உத்தரவிட்டனர்.அதன்பேரில், மாசு கட்டுப்பாட்டு குழும முதுநிலை சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், தாசில்தார் குமரன் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஜீதேந்திரா குடோனில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். இதையடுத்து, குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X