ஓட்டல் பாரில் மதுபாட்டில் திருட்டு; தொழிலாளர்கள் 4 பேரிடம் விசாரணை| Dinamalar

இந்தியா

ஓட்டல் பாரில் மதுபாட்டில் திருட்டு; தொழிலாளர்கள் 4 பேரிடம் விசாரணை

Added : ஜூலை 21, 2021
Share
புதுச்சேரி : தனியார் ஓட்டல் பாரில் புனரமைப்பு பணியின்போது மதுபாட்டில்களை திருடிய நான்கு பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.புதுச்சேரி கசேர்ன் வீதியில் பார் வசதியுடன் தனியார் ஓட்டல் உள்ளது. கொரோனா 2ம் அலை காரணமாக ஓட்டல்கள், பார்கள் மூடப்பட்டிருந்த நேரத்தில், கடையை புதுப்பிக்கும் பணி நடந்தது.இப்பபணியில் காலாப்பட்டு வெங்கடாசலம், இடையன்சாவடி முருகவேல்,

புதுச்சேரி : தனியார் ஓட்டல் பாரில் புனரமைப்பு பணியின்போது மதுபாட்டில்களை திருடிய நான்கு பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுச்சேரி கசேர்ன் வீதியில் பார் வசதியுடன் தனியார் ஓட்டல் உள்ளது. கொரோனா 2ம் அலை காரணமாக ஓட்டல்கள், பார்கள் மூடப்பட்டிருந்த நேரத்தில், கடையை புதுப்பிக்கும் பணி நடந்தது.இப்பபணியில் காலாப்பட்டு வெங்கடாசலம், இடையன்சாவடி முருகவேல், லாஸ்பேட்டை வேலவன், கரசூர் ராஜா ஆகியோர் ஈடுபட்டனர்.இவர்கள், கடந்த 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பின் ஓட்டல் திறக்கப்பட்டது. பாரில் இருந்த மதுபாட்டில்களின் இருப்பு குறித்து சரிபார்த்தனர். அதில், 10க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் குறைவது தெரிய வந்தது.அதையடுத்து, கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.புதுப்பிக்கும் பணியை மேற்கொண்ட முருகவேல், வேலவன் உள்ளிட்டோர், பாரில் இருந்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடியது தெரிய வந்தது.

இது குறித்து ஓட்டல் மேலாளர் சத்தியநாராயணன் பெரியக்கடை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து, முருகவேல் உள்ளிட்ட நால்வரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X