போலீசாரின் இரவு ரோந்து பணி; அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு | Dinamalar

இந்தியா

போலீசாரின் இரவு ரோந்து பணி; அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு

Added : ஜூலை 21, 2021
Share
புதுச்சேரி : போலீசாரின் இரவு ரோந்து மற்றும் வாகன தணிக்கையை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆய்வு செய்தார்.புதுச்சேரியில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கவும்,, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்றிரவு நகரின் பல பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணிகளை

புதுச்சேரி : போலீசாரின் இரவு ரோந்து மற்றும் வாகன தணிக்கையை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கவும்,, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்றிரவு நகரின் பல பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியதுடன், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு 11:30 மணியளவில், நேரு வீதி, ராஜா தியேட்டர் சந்திப்பில், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.சீனியர் எஸ்.பி., பிரதிக்ஷா கோத்ரா, எஸ்.பி., ரட்சனா சிங் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

வாகனங்களில் சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.இப்பணியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆய்வு செய்தார். ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன் உடனிருந்தார்.அப்போது, குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இரவு நேர ரோந்து பணியின் போது, வாகன சோதனையும் நடத்த வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X