இந்தியா

பா.ஜ., அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பா.ஜ., அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், உள்துறை அமைச்சரிடம் பொது மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர்.புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், வாரந்தோறும் செவ்வாய் கிழமையில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்களிடம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குறை கேட்டு வருகிறார்.நேற்று நடந்த குறைகேட்புக் கூட்டத்தில், மாநில மீனவரணி தலைவர் பழனி

புதுச்சேரி : பா.ஜ., அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், உள்துறை அமைச்சரிடம் பொது மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், வாரந்தோறும் செவ்வாய் கிழமையில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்களிடம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குறை கேட்டு வருகிறார்.நேற்று நடந்த குறைகேட்புக் கூட்டத்தில், மாநில மீனவரணி தலைவர் பழனி தலைமையில் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில், புதைவட கேபிள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இன்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.கட்சி நிர்வாகிகள், தொகுதி மக்கள் பலர் அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற அமைச்சர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X