இலக்குகளை அடைவதில் பெண்களுக்கு சவால்கள் அதிகம்: கவர்னர் தமிழிசை| Dinamalar

இந்தியா

இலக்குகளை அடைவதில் பெண்களுக்கு சவால்கள் அதிகம்: கவர்னர் தமிழிசை

Added : ஜூலை 21, 2021
Share
புதுச்சேரி : 'இலக்குகளை அடைவதில் ஆண்களை விட பெண்களுக்கு சவால்கள் அதிகம்' என கவர்னர் தமிழிசை கூறினார்.பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் வரவேற்றார். சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்முகாமை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை

புதுச்சேரி : 'இலக்குகளை அடைவதில் ஆண்களை விட பெண்களுக்கு சவால்கள் அதிகம்' என கவர்னர் தமிழிசை கூறினார்.

பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் வரவேற்றார். சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்முகாமை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது;பாரதிதாசன் பெண்ணுரிமை பற்றி கனவு கண்டதைப் போல பெண்கள் முன்னேறி வருகின்றனர். வருங்காலத்தில், இந்தியாவை வலிமை மிகுந்த நாடாக மாற்றுவதில் பெண்களின் பங்கு அதிகம் இருக்கும். இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது, பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தடுப்பூசி துாதுவர்களாக மாற வேண்டும். ஏனென்றால், நடிகர் விவேக் இறப்பிற்கு பின்பு, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் உள்ளது.தடுப்பூசியால் நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு. பெண்கள் உடல் நலனில் அதிக அக்கறை கொள்வது கிடையாது.மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளோம். இதை உயர்நீதிமன்றமே பாராட்டி உள்ளது.

இந்தியாவில் வயது குறைந்த கவர்னர் நான்தான். பணிகளை ஈடுபாட்டோடு செய்யும்போது அது வெற்றியைக் கொடுக்கும்.இலக்குகளை அடைவ தில் ஆண்களை விட பெண் களுக்கு சவால்கள் அதிகம். அவற்றை எதிர்கொண்டு சாதிக்க வேண்டும்.அரசியல்வாதி மகள் என்பதால், விரைவாக உயர்ந்த இடத்திற்கு வந்து விட்டதாக பலர் நினைப்பர். அது தவறு. நமக்கான வாழ்க்கை பாதையை நாம் தான் உருவாக்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.

பேராசிரியர் கோரிக்கை:

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வீடுகளுக்கு குடிநீர், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவித்து கட்டாயமாக்கலாம் என, பேராசிரியர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதிலளித்த கவர்னர் தமிழிசை, 'ஜனநாயக நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நம்மையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையோடு தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X