இந்தியா

வண்ண ஓவியங்களுடன் குழந்தைகள் வார்டு தயார்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்காக, அரசு மருத்துவக் கல் லுாரி மருத்துவமனையில் பிரத்யேக வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இங்கு, குழந்தைகள் மனநிலைக்கு ஏற்ப கார்ட்டூன் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இந்நிலையில், மூன்றாம் அலை ஓரிரு மாதங்களில் துவங்கும் எனவும், அதில்

புதுச்சேரி : கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்காக, அரசு மருத்துவக் கல் லுாரி மருத்துவமனையில் பிரத்யேக வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இங்கு, குழந்தைகள் மனநிலைக்கு ஏற்ப கார்ட்டூன் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இந்நிலையில், மூன்றாம் அலை ஓரிரு மாதங்களில் துவங்கும் எனவும், அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.புதுச்சேரியில் கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக, கதிர்காமம், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், படுக்கை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அங்கு, குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலை உருவாக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்காக, குழந்தைகள் வார்டின் உட்புற சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களான லயன் கிங், சூப்பர் மரியோ, ஹங்கனா மட்டாட்டா ஆகியவை ஓவியங்களாக தீட்டப்பட்டு வருகிறது.இப்பணி, பெயிண்ட் புதுச்சேரி மற்றும் கேர் மேக்ஸ் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X