பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வழி இடஒதுக்கீடு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி., மனு தள்ளுபடி

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை : வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுதையும், தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவை முன்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்யக் கோரிய டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ் வழியில் படித்தோருக்கு

மதுரை : வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுதையும், தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவை முன்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்யக் கோரிய டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.



latest tamil news


வேலைவாய்ப்பிற்கான கல்வித்தகுதியை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்தம் செல்லும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதனை டிஎன்பிஎஸ்சி 2020 தேர்வு அறிவிப்பு நடைமுறையிலிருந்து பின்பற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இட ஒதுக்கீட்டை முன்தேதியிட்டு அமல்படுத்துவது, அனைவரின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், இட ஒதுக்கீட்டை எதிர்காலத்தில் பின்பற்ற உத்தரவிடக்கோரி டிஎன்பிஎஸ்சி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, டிஎன்பிஎஸ்சி மனுவை தள்ளுபடி செய்தது.


திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.'குரூப் 1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜனவரி 20ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழியில் படித்ததற்குரிய - பி.எஸ்.டி.எம்., - சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். 'தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது.

டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். பள்ளிக்கல்வி, கல்லுாரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். மார்ச்சில் நீதிபதிகள்என்.கிருபாகரன், பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், 'வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுதையும் தமிழ் வழியில் படித்தோருக்கு 20 சதவீதம்முன்னுரிமை அளிக்கும்சட்டத் திருத்தம் செல்லுபடியாகும்.


latest tamil news



'இதை டி.என்.பி.எஸ்.சி., 2020 தேர்வு அறிவிப்பு நடைமுறையிலிருந்து பின்பற்ற வேண்டும்' என்றனர். டி.என்.பி.எஸ்.சி., தாக்கல் செய்த மனு:சட்டத் திருத்தத்திற்கு முன், தேர்வு அறிவிப்பு வெளியானது.தேர்வு நடத்தி விட்டோம். தமிழ்வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவைநிறைவேற்றுவது மற்றும் அனைவரின் கல்விச் சான்றிதழ்களையும் சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைச் சிரமங்கள் உள்ளன.காலதாமதம் ஏற்படும்.

சட்டத்திருத்தத்தின்படி முன்தேதியிட்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். சட்டத் திருத்தத்தின்படி எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டது. நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது.நீதிபதிகள், 'தமிழ் வழியில் படித்ததற்கான சலுகை பெற, மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை உட்பட சில பல்கலைகளில் முறைகேடாக சான்று பெறுகின்றனர்' என அதிருப்தி வெளியிட்டு, டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
21-ஜூலை-202112:12:21 IST Report Abuse
Suppan தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றவர்களுடன் சரிசமமாகப் போட்டிபோடமுடியாது என்று ஆகிறதே. இது தமிழ் வழிக் கல்விக்கே இழுக்கு. இதை முன்னிறுத்துபவர்கள் சிந்திக்க வேண்டும்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-202110:43:42 IST Report Abuse
vpurushothaman முறைகோடாக சான்று அளித்தால் நீதி மன்றம் என்ன செய்யும்?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-ஜூலை-202109:21:10 IST Report Abuse
duruvasar விடியல் ஆட்சியின் கொள்கைப்படி நுழைவு தேர்வு, தகுதி தேர்வு இந்த வார்த்தைகளை தமிழ் அகராதியிலிருந்து நீக்கவும், தடைசெய்யபட இருக்கும் இந்த வார்த்தைகளை உபயோகிப்பர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்க்குமான கடுமையான சட்டத்தை வரும் பட்ஜட் கூட்டத்தொடரில் இயற்றவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X