இந்தியா

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அரசின் கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் அரசின் புதிய திட்டத்திற்கு,கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி உள்ளார்.பிரசவத்தின்போது இறப்பை தவிர்க்கவும், குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்திடவும், அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, கருவுற்ற பெண்களை, மாதந்தோறும் ஆஷா பணியாளர்கள் பரிசோதித்து, மருத்துவ ஆலோசனை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில்,
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அரசின் கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரி : கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் அரசின் புதிய திட்டத்திற்கு,கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி உள்ளார்.

பிரசவத்தின்போது இறப்பை தவிர்க்கவும், குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்திடவும், அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, கருவுற்ற பெண்களை, மாதந்தோறும் ஆஷா பணியாளர்கள் பரிசோதித்து, மருத்துவ ஆலோசனை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், தற்போதைய அரசு, பேறுகால இறப்பை தவிர்க்கவும், மருத்துவமனைகளில் பிரசவிப்பை ஊக்குவிக்கவும் புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், அங்கன்வாடியில் பதிவு செய்துள்ள கர்ப்பிணிகளுக்கு பேறுகால பொருட்களாக ரூ.4,000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட உள்ளன.இதில், சத்து மாவு, நெய், புரதச்சத்து பிஸ்கட், குழந்தை பராமரிப்பிற்கு ரூ.1,000 மதிப்பில் சோப்பு, ஷாம்ப், பவுடர், துண்டு, குழந்தைக்கு ஆடை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்திற்கு, மாதத்திற்கு ரூ.35 லட்சம் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு அனுமதி கோரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.அதனை பரிசீலித்த கவர்னர் தமிழிசை, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், இத்திட்டத்திற்கு மாதம் ரூ. 35 லட்சம் வீதம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களுக்கு ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கி அனுமதி வழங்கினார். இத்திட்டம் தகுதியுடைய அனைவருக்கும் சென்றடையும் வகையில், பரவலாக விளம்பரம் செய்திட, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.


முதல்வருக்கு கவர்னர் பாராட்டு

பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் கவர்னர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் பேசுகையில், எல்லோரும் பாதுகாப்பாக இருக்க அரசு பல நல்ல திட்டம் கொண்டு வருகிறது. அதற்கு நான் துணையாக இருக்கிறேன்.முதல்வரை சந்தித்தபோது, கர்ப்பிணிகளுக்கு சத்துணவு திட்டம் கொண்டு வர கோரினேன். அந்த திட்டத்தை ஆரம்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும்போது ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய சத்துணவு பெட்டகம் வழங்கப்படும். இது, இரண்டாவது குழந்தை பிறக்கும் போதும் வழங்கப்படும். அதற்கான ஒப்புதல் அளித்துள்ளேன். முதல்வர் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது பாராட்டுக்குரியது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X