இந்தியா

சுருக்கு வலை பயன்பாட்டிற்கு தடை கோரி 18 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சுருக்குவலை மூலம் கடலில் மீன்பிடிப்பதை தடுக்க வலியுறுத்தி, 18 கிராம மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.கடலில் சுருக்கு வலை மூலம் மீன்பிடித்தால், பெரிய மீன்கள் முதல் சின்னஞ்சிறிய மீன் வரை அனைத்தும் சிக்கிக் கொள்ளும். இதனால், கடலில் மீன் வளம் அழியும் என்பதால் சுருக்கு வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சுருக்கு வலை

புதுச்சேரி : சுருக்குவலை மூலம் கடலில் மீன்பிடிப்பதை தடுக்க வலியுறுத்தி, 18 கிராம மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.

கடலில் சுருக்கு வலை மூலம் மீன்பிடித்தால், பெரிய மீன்கள் முதல் சின்னஞ்சிறிய மீன் வரை அனைத்தும் சிக்கிக் கொள்ளும். இதனால், கடலில் மீன் வளம் அழியும் என்பதால் சுருக்கு வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது. மீறினால், மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் மானியம், டீசல்கள் வழங்கப்படாது என, மீன்வளத்துறை தெரிவித்து இருந்தது.

ஆனாலும், சுருக்கு வலையை பயன்படுத்த அனுமதி கோரி, படகு உரிமையாளர்கள், சபாநாயகர் செல்வம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுருக்கு வலைகளை பயன்படுத்தி சில மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.இதை தடுக்க கோரி, கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரை உள்ள 18 மீனவ கிராமத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.

அதனால் 280 விசைப்படகுகள், 150 எப்.ஆர்.பி., படகுகள், 400க்கும் மேற்பட்ட பைபர் படகு கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.வேலை நிறுத்தப் போராட்டம் வரும் 23ம் தேதி வரை தொடரும் என அறிவித்துள்ளனர்.மேலும், சுருக்கு வலை பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X