பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவிகள் வழங்கல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியத்தோப்பு அடுத்த பின்னலுாரில் குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து பொருட்களை இழந்த குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் அம்பேத்கர் நகர் பெரிய தெருவைச் சேர்ந்த செல்வராசு, ராமச்சந்திரன் ஆகியோரது குடிசை வீடுகள் நேற்று முன்தினம் மாலை தீப்பிடித்து சேதமானது. தகவலறிந்த எம்.எல்.ஏ.,

சேத்தியாத்தோப்பு : சேத்தியத்தோப்பு அடுத்த பின்னலுாரில் குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து பொருட்களை இழந்த குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் அம்பேத்கர் நகர் பெரிய தெருவைச் சேர்ந்த செல்வராசு, ராமச்சந்திரன் ஆகியோரது குடிசை வீடுகள் நேற்று முன்தினம் மாலை தீப்பிடித்து சேதமானது. தகவலறிந்த எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் சென்று ஆறுதல் கூறி, சொந்த நிதியில் தலா ரூ. 5,000, வேட்டிசேலை, ஒரு மூட்டை அரிசி, காய்கறிகளை வழங்கினார்.

புவனகிரி ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர் முருகுமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வீரமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு தலைவர் புருேஷாத்தமன், ஒன்றிய கவுன்சிலர் அனிதா பொய்யாமொழி, முன்னாள் சேர்மன் தனலட்சுமி கலைவாணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சபரி, கிளை செயலாளர் வரதராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X