பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளர்களின் அலட்சியத்தால் ஆதார் மையத்தில் குவியும் கூட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் பணியாளர்களின் அலட்சியத்தால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக ஆதார் சேவை மையத்தில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் ஆதார் கார்டு சம்பந்தப்பட்ட பணிகளுக்காக வந்து செல்கின்றனர். பணிகளை அவ்வப்போது செய்து முடித்து விடாமல், காலம் தாழ்த்தி செய்வதுடன், பயனாளிகளை வேறு நாட்களில்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் பணியாளர்களின் அலட்சியத்தால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக ஆதார் சேவை மையத்தில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் ஆதார் கார்டு சம்பந்தப்பட்ட பணிகளுக்காக வந்து செல்கின்றனர். பணிகளை அவ்வப்போது செய்து முடித்து விடாமல், காலம் தாழ்த்தி செய்வதுடன், பயனாளிகளை வேறு நாட்களில் வரச்சொல்லி, டோக்கன் வழங்கி திருப்பி அனுப்புகின்றனர்.

இதனால் அந்தந்த நாட்களிலேயே பணிகளை செய்ய முடியாமல் குறிப்பிட்ட நாட்களில் டோக்கனுடன், காலை முதலே பயனாளிகள் தாலுகா அலுவலகத்தின் முன் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நிலை இருந்து வருகிறது.அவ்வாறு அதிகாலை முதலே வருபவர்கள், சமூக இடைவெளியின்றி கூட்டமாக நிற்கின்றனர்.

இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.அரசின் சேவைகளை உடனுக்குடன் ஆன்லைன் மூலமாக கிடைப்பதற்காக துவக்கப்பட்ட இந்த சேவை, பணியாளர்களின் அலட்சியத்தால் காலதாமதம் ஏற்படுகிறது.கலெக்டர் ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X