பொது செய்தி

தமிழ்நாடு

கந்து வட்டி; எஸ்.பி., எச்சரிக்கை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கந்து வட்டியில் பணம் வசூல் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஜியாவுல்ஹக் எச்சரித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:நடுத்தர மற்றும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது குடும்பச் சூழல், அவசர தேவை என நன்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்குகின்றனர். இதில் ஒரு சில கடன் கொடுப்போர் வட்டிக்கு,

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கந்து வட்டியில் பணம் வசூல் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஜியாவுல்ஹக் எச்சரித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:நடுத்தர மற்றும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது குடும்பச் சூழல், அவசர தேவை என நன்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்குகின்றனர். இதில் ஒரு சில கடன் கொடுப்போர் வட்டிக்கு, வட்டி என கந்து வட்டி வசூலிக்கின்றனர்.மேலும், பணத்தை வசூலிக்க அடியாட்களை வைத்து, மிரட்டுதல் உள்ளிட்ட தில்லு முல்லு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

இதனால், சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர்.அதிக வட்டி வசூலிக்கும் தனிநபரிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2003ம் ஆண்டு தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, அதீத வட்டி வசூல் செய்பவர்கள், தங்களிடம் கடன் வாங்கிய நபர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அசையும், அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால் அதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தல் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த சட்டத்தில் உள்ளன.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை அணுகலாம். அதீத கந்து வட்டியில் பணம் வசூல் செய்பவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X