அன்னதான கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அன்னதான கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்

Added : ஜூலை 21, 2021
Share
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் கோவில் அருகே உள்ள அன்னதாக கூடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் நஞ்சுண்ட ஞானதேசிக சிவன் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக, கோவிலுக்கு அருகே பக்தர்கள் ெஷட் கட்டியிருந்தனர்.பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில்

தியாகதுருகம் : தியாகதுருகத்தில் கோவில் அருகே உள்ள அன்னதாக கூடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் நஞ்சுண்ட ஞானதேசிக சிவன் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக, கோவிலுக்கு அருகே பக்தர்கள் ெஷட் கட்டியிருந்தனர்.பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்ததால், செயல் அலுவலர் மல்லிகா, இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் நேற்று காலை 10:00 மணியளவில் ெஷட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற முயன்றனர்.

இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலையம் எதிரே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவில் தர்மகர்த்தா வெங்கடேசன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் 11:00 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை 10 நிமிடத்தில் போலீசார் அங்கிருந்து அகற்றினர். சுற்று வட்டார பொதுமக்களும் ஆட்சேபணை தெரிவித்ததால், அன்னதான கூடத்தை இடிக்காமல் செயல் அலுவலர் திரும்பினார்.சாலைமறியலில் ஈடுபட்ட தர்மகர்த்தா வெங்கடேசன் உட்பட 16 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X