பொது செய்தி

தமிழ்நாடு

மாநில உதவி தணிக்கை அலுவலர் புயல் பாதுகாப்பு மையங்களில் ஆய்வு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கிள்ளை : பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 8 புயல் பாதுகாப்பு மையங்களை, மாநில உதவி தணிக்கை அலுவலர் சுந்தர் ஆய்வு செய்தார்.பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், புயல் மற்றும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, பாதிக்கப்படும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சாமியார்பேட்டை, சின்னுார், புதுப்பேட்டை, கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு, மடுவங்கரை, தில்லைவிடங்கன், பின்னத்துார்,

கிள்ளை : பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 8 புயல் பாதுகாப்பு மையங்களை, மாநில உதவி தணிக்கை அலுவலர் சுந்தர் ஆய்வு செய்தார்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், புயல் மற்றும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, பாதிக்கப்படும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சாமியார்பேட்டை, சின்னுார், புதுப்பேட்டை, கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு, மடுவங்கரை, தில்லைவிடங்கன், பின்னத்துார், கீழ திருக்கழிப்பாளை, கவரப்பட்டு உள்ளிட்ட இடங்களில், புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

இந்த புயல் பாதுகாப்பு மையங்களை நேற்று மாநில உதவி தணிக்கை அலுவலர் சுந்தர் ஆய்வு செய்தார். புயல் மையங்களில், தற்போதுள்ள வசதிகள், பழுதடைந்த உபகரணங்கள், தேவையான வசதிகள் குறித்தும், குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.அவருடன், பி.டி.ஓ.,க்கள் சிவஞானசுந்தரம், சுகுமார், ஊராட்சி தலைவர் திருமுருகன், துணை பி.டி.ஓ.,க்கள் செந்தில்குமார், செல்வி, வி.ஏ.ஓ., சிவகாமசுந்தரி, ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X