கோவாக்சின் தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவாக்சின் தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்

Added : ஜூலை 21, 2021
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.கடலுார் மாவட்டத்தில் நேற்று வரையில் 4 லட்சத்து 90 ஆயிரத்து 979 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 4 லட்சத்து 8 ஆயிரத்து 524 பேர் முதல் தவணையும், 82 ஆயிரத்து 455 பேர் 2வது தவணையும் போட்டுள்ளனர். மாவட்டத்தில் சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாட்டால் முதல் தவணை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.கடலுார் மாவட்டத்தில் நேற்று வரையில் 4 லட்சத்து 90 ஆயிரத்து 979 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 4 லட்சத்து 8 ஆயிரத்து 524 பேர் முதல் தவணையும், 82 ஆயிரத்து 455 பேர் 2வது தவணையும் போட்டுள்ளனர்.

மாவட்டத்தில் சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாட்டால் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இரண்டாவது தவணைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்திற்கு கூடுதலாக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. கடந்த 16ம் தேதி இரண்டு நாட்களில் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அதிகளவில் பொதுமக்கள் திரண்டு காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அதே சமயத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 25 ஆயிரத்திற்கும் மேல் வந்த நிலையில், 2,000 மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி வந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் தவணை கோவாக்சின் போட்டவர்கள் இரண்டாவது தவணை போட மருத்துவமனைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால், கோவிஷீல்டு தடையின்றி போடப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X