பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கண்காணிப்பு ஒருங்கிணைப்பு கூட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான மணல் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:வட்ட அளவிலான கண்காணிப்புக் குழு தங்களது அதிக கனிம கடத்தல் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அங்கு தொடர் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். கனிம கடத்தல் தொடர்பாக புகார்கள் மீது

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான மணல் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:வட்ட அளவிலான கண்காணிப்புக் குழு தங்களது அதிக கனிம கடத்தல் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அங்கு தொடர் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். கனிம கடத்தல் தொடர்பாக புகார்கள் மீது உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் செயல்படும் செங்கல் சூளைகள் அரசுக்கு வரும் கட்டணங்களை செலுத்தி பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்குவாரிகளில் வெடிபொருட்கள் முறையான அனுமதி பெற்றுதான் பயன்படுத்துகிறார்களா, வெடி வைப்பதற்கு முன் முறையான எச்சரிக்கையினை உரிமையாளர்கள் மேற்கொள்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், திண்டிவனம் சப் கலெக்டர் அமித், ஆர்.டி.ஓ., அரிதாஸ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுந்தரராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X