அதிமுக., தவறுகளை திமுக., செய்யாது ; அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக., தவறுகளை திமுக., செய்யாது ; அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (29)
Share
மதுரை : ''தி.மு.க., அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. முந்தைய அ.தி.மு.க., அரசு செய்த தவறுகளை செய்யாது,'' என மதுரையில் நடந்த மூன்று மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு

மதுரை : ''தி.மு.க., அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. முந்தைய அ.தி.மு.க., அரசு செய்த தவறுகளை செய்யாது,'' என மதுரையில் நடந்த மூன்று மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.latest tamil newsஅவர் கூறியதாவது: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதுவரை 16,567 மனுக்கள் இந்த மூன்று மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இதில் ஐயாயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அதிகபயனாளிகளை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆர்.டி.ஒ.,க்கள் இடத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.


latest tamil newsஅரசு இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறியுள்ளோம். அரசு திட்டங்களுக்கு நிலங்கள் அதிகம் தேவை. வருவாய்த்துறையில் காலி வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும். பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை கையப்படுத்தும் கோப்பு முந்தைய ஆட்சியில் கிடப்பில் இருந்தது. அதன்படி நிலங்களை கையகப்படுத்த நான் உத்தரவிட்டு முதல்வர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil newsஓரிரு நாட்களில் முதல்வர் கையெழுத்திட்ட பின் நிலங்களை கையகப்படுத்தும் பணி துவங்கும்.கடந்தகால அ.தி.மு.க., அரசு தவறு செய்ததால் தி.மு.க., அரசு வந்துள்ளது. அ.தி.மு.க., அரசின் தவறுகளை செய்ய மாட்டோம், என்றார்.அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், நில நிர்வாக கமிஷனர் நாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூர்யகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X