சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்...

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மணல் கடத்தியவர் கைதுவிழுப்புரம்: கண்டமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், அம்மணங்குப்பத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், திருட்டு மணல் ஏற்றிக்கொண்டு, அதை மறைப்பதற்காக மேல் பகுதியில் செங்கல் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை போலீசார் பறிமுதல் செய்து,

மணல் கடத்தியவர் கைது

விழுப்புரம்: கண்டமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், அம்மணங்குப்பத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், திருட்டு மணல் ஏற்றிக்கொண்டு, அதை மறைப்பதற்காக மேல் பகுதியில் செங்கல் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை போலீசார் பறிமுதல் செய்து, புதுச்சேரி செல்லிப்பட்டைச் சேர்ந்த அஜித், 21; என்பவரை கைது செய்தனர்.

லாரி மோதி ஒருவர் பலி

மூங்கில்துறைப்பட்டு: மையனுார் சிங்காரதோப்பைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் ஆரோக்கியதாஸ், 24; வாகன மெக்கானிக். இவர், பைக்கில் புதுாரில் தனியார் ஐ.டி.ஐ., அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில், ஆரோக்கியதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வீடு புகுந்து திருட்டு

திண்டிவனம்: ஆவணிப்பூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 57; இவர், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் சேந்தமங்கலம் காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார்.அதிகாலை வீட்டிற்கு வந்தபோது, பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையில் பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், ஒன்றரை சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதே போன்று அதே தெருவில், முரளி என்பவரது வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றிருப்பது தெரியவந்தது. ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

தியாகதுருகம்: சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேரன் மகன் பச்சையப்பன், 19; சென்னையில் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை சென்னையிலிருந்து தனது பைக்கில் சிறுவங்கூர் சென்றார். இரவு 9:00 மணியளவில் தியாகதுருகம் புறவழிச் சாலையில் விருகாவூர் சாலை மேம்பாலத்தில் சென்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி பச்சையப்பன் மீது மோதியது. இதல், சம்பவ இடத்திலேயே பச்சையப்பன் இறந்தார். தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X