பொது செய்தி

தமிழ்நாடு

காவலர் உடல் தகுதி தேர்வு பணி ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான உடல் தகுதி தேர்வையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு துறை காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்வாகியோருக்கான உடல் தகுதி தேர்வு வரும் 26ம் தேதி நடக்கிறது.இந்த தேர்விற்கான பாதுகாப்பு

விழுப்புரம் : இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான உடல் தகுதி தேர்வையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு துறை காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்வாகியோருக்கான உடல் தகுதி தேர்வு வரும் 26ம் தேதி நடக்கிறது.இந்த தேர்விற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.

டி.ஐ.ஜி., பாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்.பி., ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், உடல்தகுதி தேர்வு நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்வது குறித்தும், இதில் பங்கேற்போருக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் உட்பட துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X