கொரோனா விதிமீறல்: கடைகளுக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமீறல்: கடைகளுக்கு அபராதம்

Added : ஜூலை 21, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் கொரோனா ஊரடங்கை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் நகராட்சி நகர்நல அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையில் அலுவலர்கள் விழுப்புரம் காமராஜர் வீதியில் ஆய்வு செய்தனர். அப்போது, நகைக் கடை, பலசரக்கு கடை உள்பட 20 கடைகளில் முகக் கவசம், சமூக இடைவெளி பின்பற்றாமல் வியாபாரம் செய்ததையொட்டி, கடை உரிமையாளர்களுக்கு தலா 500 ரூபாய்

விழுப்புரம் : விழுப்புரத்தில் கொரோனா ஊரடங்கை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

விழுப்புரம் நகராட்சி நகர்நல அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையில் அலுவலர்கள் விழுப்புரம் காமராஜர் வீதியில் ஆய்வு செய்தனர். அப்போது, நகைக் கடை, பலசரக்கு கடை உள்பட 20 கடைகளில் முகக் கவசம், சமூக இடைவெளி பின்பற்றாமல் வியாபாரம் செய்ததையொட்டி, கடை உரிமையாளர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.தொடர்ந்து, உழவர் சந்தையருகே உள்ள பழக்கடை குப்பைகளை அருகே உள்ள காலி மனையில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதை யொட்டி, பழக்கடை உரிமையாளரிடம் 1000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X