நலத்திட்ட உதவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஜூலை 21, 2021
Share
திண்டிவனம் : திண்டிவனம் அருகே மங்கலம் கிராமத்தில் பொது மக்களுக்கு தி.மு.க., பிரமுகர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம், மங்கலம் கிராமத்தில், அன்பின்பாதை கிருஷ்ணவேணி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர், ஈச்சேரி தி.மு.க., பிரமுகர் சேகர் சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், கிராம மக்கள் 300க்கும்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே மங்கலம் கிராமத்தில் பொது மக்களுக்கு தி.மு.க., பிரமுகர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம், மங்கலம் கிராமத்தில், அன்பின்பாதை கிருஷ்ணவேணி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர், ஈச்சேரி தி.மு.க., பிரமுகர் சேகர் சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, அலுமினிய சாமான்கள் உள்ளிட்ட நிவாரணம் வழங்கினார். மேலும், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 50 ஆயிரம் ரூபாயை ஈச்சேரி தி.மு.க., பிரமுகர் சேகர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் ராஜசக்தி, மாவட்ட பிரதிநிதிகள் திண்டிவனம் ரவிச்சந்திரன், முருகன், ராஜாராம், அவைத்தலைவர் முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோகுலகிருஷ்ணன், எழில்அரசன், பிரதிநிதிகள முரளி, விஜய், கோகுல்ராஜ், கிளை நிர்வாகிகள் புத்திரன், ரஞ்சினி, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X