தமிழ்நாடு

மேல்மலையனூர் புதிய காவல் துணைக் கோட்டம் துவங்கப்படுமா? அதிகரிக்கும் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை தேவை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் செஞ்சி போலீஸ் துணைக் கோட்டத்தை இரண்டாக பிரிக்க காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் என 4 போலீஸ் துணைக் கோட்டங்கள் உள்ளன. இதற்கென தனித்தனி டி.எஸ்.பி.,க்கள்

செஞ்சி : செஞ்சி பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் செஞ்சி போலீஸ் துணைக் கோட்டத்தை இரண்டாக பிரிக்க காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் என 4 போலீஸ் துணைக் கோட்டங்கள் உள்ளன. இதற்கென தனித்தனி டி.எஸ்.பி.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் உட்கோட்டத்தில் 14 போலீஸ் நிலையங்களும், கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் 6 போலீஸ் நிலையங்களும், திண்டிவனம் உட்கோட்டத்தில் 8 போலீஸ் நிலையங்களும், செஞ்சி துணைக் கோட்டத்தில் கெடார், கஞ்சனுார், அனந்தபுரம், நல்லாண்பிள்ளை பெற்றாள், அவலுார்பேட்டை, வளத்தி, சத்தியமங்கலம், கண்டாச்சிபுரம், செஞ்சி, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் என 11 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

மேல்மலையனுாரில் புதிய போலீஸ் நிலையம் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் 12 போலீஸ் நிலையங்கள் செஞ்சி துணைக் கோட்டத்தின் கீழ் வரும். தற்போது விழுப்புரம் துணைக் கோட்டத்தைப் பிரித்து விக்கிரவாண்டி தனி துணைக் கோட்டம் துவங்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கு அடுத்த பெரிய துணைக் கோட்டமாக செஞ்சி உள்ளது.இதன் தெற்கு எல்லையாக சூரப்பட்டு, வெங்கந்துார் கிராமங்களுக்கும், வடக்கு எல்லையாக எதப்பட்டு, தேப்பிராமப்பட்டு கிராமங்களுக்கும் உள்ளன. இதன் இடையே 90 கி.மீ., துாரம் உள்ளது.

இதே போல் மேற்கு எல்லையாக உள்ள தடாகம், போத்துவாய் கிராமங்களில் இருந்து, கிழக்கு எல்லையாக உள்ள நீர்பெருத்தகரம், ஏதாநெமிலி கிராமங்கள் உள்ளன. இதன் இடையே 70 கி.மீ., துாரம் உள்ளது.ஒரு எல்லையில் இருக்கும் அதிகாரி மறு எல்லைக்கு சென்றடைய 2 முதல் 3 மணிநேரம் ஆகிறது. செஞ்சி துணைக் கோட்டத்திற்குள் செஞ்சி, மேல்மலையனுார், விக்கிரவாண்டி, விழுப்புரம், கண்டாச்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏற்படும் சட்டம் ஒழங்கு பிரச்னைக்காக சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு காவல் துறை அதிகாரிகள் செல்ல வேண்டியுள்ளது.

திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா, பவுர்ணமி கிரிவலம் ஆகிய நாட்களின் போது சென்னை, புதுச்சேரியில் இருந்து செஞ்சி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா மற்றும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போதும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து பிரச்னை அதிகரித்து வருகிறது.

மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்து விட்டன.எனவே, செஞ்சி போலீஸ் துணைக் கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது புதிதாக காவல் நிலையம் உருவாக உள்ள மேல்மலையனுாரை தலைமையிடமாகக் கொண்டு மேல்மலையனுார், வளத்தி, அவலுார்பேட்டை, நல்லாண்பிள்ளை பெற்றாள், சத்தியமங்கலம் போலீஸ் நிலையங்களை புதிய துணைக் கோட்டமாக உருவாக்கலாம்.

இதன் மூலம் காவல் துறை அதிகாரிகள் காவல் நிலையங்களை கண்காணிப்பதை அதிகரித்து விரைவான நடவடிக்கை எடுக்க முடியும். மேல்மலையனுாருக்கு வரும் பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பையும் வழங்க முடியும். எனவே செஞ்சி துணைக் கோட்டத்தைப் பிரித்து மேல்மலையனுார் புதிய துணைக் கோட்டம் உருவாக்க காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X