கடலுாரில் போராட்டம்: 1,136 பேர் மீது வழக்கு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் போராட்டம்: 1,136 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 21, 2021
Share
கடலுார் : கடலுாரில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும், மீனவர் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பெண்கள் உட்பட 1,136 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலுார் தேவனாம்பட்டினத்தில் அப்பகுதி மீனவர்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பாரதி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற பெண்களை

கடலுார் : கடலுாரில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும், மீனவர் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பெண்கள் உட்பட 1,136 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலுார் தேவனாம்பட்டினத்தில் அப்பகுதி மீனவர்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பாரதி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற பெண்களை வண்ணாரப்பாளையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறி கூட்டம் கூடியதாக தேவனாம்பட்டினம் ஊர் தலைவர் ஏகாம்பரம் மற்றும் 200 பெண்கள் உட்பட 720 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இதே போல் கடலுார் பாரதி சாலையில் மறியலில் ஈடுபட்ட தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த 200 பெண்கள் மீது புதுநகர் போலீசாரும், ராசாப்பேட்டை கடலில் இறங்கி போராட்டம் நடத்திய ராசாப்பேட்டை ஊர் தலைவர் வீரப்பன் மற்றும் 100 பெண்கள் உட்பட 206 பேர் மீது துறைமுகம் போலீசாரும் வழக்குப் பதிந்தனர்.கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி படகுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்திய தேவனாம்பட்டினம் விஜயவீரன் உட்பட 10 பேர் மீது துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும், மீனவர் சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பெண்கள் உட்பட 1,136 பேர் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X