சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்; பெண் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே இரண்டு மாத கடன் தவணை கட்டத் தவறிய கூலித் தொழிலாளியின் வீட்டை தனியார் நிறுவன ஊழியர்கள் இழுத்து பூட்டியதால், மனமுடைந்த பெண் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள், 34; இவரது மனைவி ஐஸ்வர்யா, 28; 2 மகன்கள் உள்ளனர். அருள் விருத்தாசலத்தில் உள்ள

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே இரண்டு மாத கடன் தவணை கட்டத் தவறிய கூலித் தொழிலாளியின் வீட்டை தனியார் நிறுவன ஊழியர்கள் இழுத்து பூட்டியதால், மனமுடைந்த பெண் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள், 34; இவரது மனைவி ஐஸ்வர்யா, 28; 2 மகன்கள் உள்ளனர். அருள் விருத்தாசலத்தில் உள்ள பைவ் ஸ்டார் நிதி நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டு மனை பத்திரத்தை கொடுத்து ரூ.2 லட்சம் வீட்டுக் கடன் பெற்றார்.

கடந்த ஓராண்டாக மாதத் தவணை கட்டி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கால், இரண்டு மாதங்களாக தவணையை கட்டவில்லை. இதனால், நேற்று பகல் 12 மணிக்கு அருள் வீட்டிற்கு தனியார் நிறுவன ஊழியர்கள் கடன் தொகையை வசூலிக்க சென்றனர். அப்போது, அருள், ஐஸ்வர்யா கூலி வேலைக்கு வெளியே சென்றிருந்தனர்.

மகன்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களை தனியார் நிறுவன ஊழியர்கள் வெளியேற்றி, வீட்டை பூட்டி, நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.இதையறிந்த ஐஸ்வர்யா, அவமானம் தாங்காமல் பூட்டை உடைத்து, துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த ஐஸ்வர்யாவின் உறவினர்கள், விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே உள்ள அந்நிறுவனத்திற்கு மதியம் 2 மணியளவில் சென்று, ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு ஊழியர்கள் துாண்டியதாக கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X