புதிய சுகாதார மாவட்டம்: விருத்தாசலம் மக்கள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய சுகாதார மாவட்டம்: விருத்தாசலம் மக்கள் மகிழ்ச்சி

Added : ஜூலை 21, 2021
Share
விருத்தாசலம் : விருத்தாசலத்தை புதிய சுகாதார மாவட்டமாக அறிவிப்பது தொடர்பான கருத்துரு கேட்டுள்ளது.பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் புதிய சுகாதார மாவட்ட அலுவலகங்கள் உருவாக்க வரும் 22ம் தேதிக்குள் கருத்துருக்கள் அனுப்ப மாவட்ட துணை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் கடலுார் மாவட்டம், விருத்தாசலம் இடம் பெற்றுள்ளதை வரவேற்று, மக்கள்,

விருத்தாசலம் : விருத்தாசலத்தை புதிய சுகாதார மாவட்டமாக அறிவிப்பது தொடர்பான கருத்துரு கேட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் புதிய சுகாதார மாவட்ட அலுவலகங்கள் உருவாக்க வரும் 22ம் தேதிக்குள் கருத்துருக்கள் அனுப்ப மாவட்ட துணை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் கடலுார் மாவட்டம், விருத்தாசலம் இடம் பெற்றுள்ளதை வரவேற்று, மக்கள், மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தலுக்கு

முன், விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். தற்போது புதிய சுகாதார மாவட்ட கருத்துரு கேட்டிருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'நிர்வாக தேவை மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதார பலன் எளிதில் சென்றடைய புதிய சுகாதார மாவட்டங்கள் பிரிக்கப்படும். தற்போது 42 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இந் நிலையில், விருத்தாசலம் உட்பட மேலும் 4 புதிய சுகாதார மாவட்டங்கள் பிரிக்கப்படுவது நல்ல விஷயம். அதன்படி, விருத்தாசலத்திற்கு துணை இயக்குனர் பதவி உருவாக்கப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிர்வாக முன்னேற்றத்துடன் சிறப்பாக செயல்படும். விருத்தாசலம் புதிய சுகாதார மாவட்டத்தில், மங்களூர், நல்லுார், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் உட்பட ஆறு வட்டார மருத்துவ அலுவலகம் இணைக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பான கருத்துருக்கள் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் விருத்தாசலம் தனி மாவட்ட எதிர்பார்ப்பு கூடியுள்ளது' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X