சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எட்டு ஆண்டுகளாக 'டிமிக்கி': பகல் கொள்ளையன் கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 8 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மேலந்தல் கிராமத்தில் கடந்த 16ம் தேதி பட்டபகலில் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, 50 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோன்று அப்பகுதியில் மேலும் 2 திருட்டு சம்பவங்கள்

திருக்கோவிலுார் : கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 8 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மேலந்தல் கிராமத்தில் கடந்த 16ம் தேதி பட்டபகலில் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, 50 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோன்று அப்பகுதியில் மேலும் 2 திருட்டு சம்பவங்கள் அரங்கேறியது.டி.எஸ்.பி., கெங்காதரன், மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், அன்பழகன், உலகநாதன், திருமால், ராஜசேகரன், பாண்டியன் மற்றும் ஏட்டுகள் சிவஜோதி, வீரப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை மாடம்பூண்டி கூட்ரோட்டில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த வடகரைத்தாழனுாரைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் காமராஜ், 45; இவர், கடந்த 8 ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தில் 100 நாள் வேலை நடைபெறும் கிராமங்களுக்குச் சென்றுள்ளார். அங்கு பூட்டிய வீட்டை நோட்டம் விட்டு, பட்டப்பகலில், கொள்ளையடித்தது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொள்ளையில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார்.மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மூலம் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கிக் குவித்து வைத்திருப்பதும், கார் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது.மணலுார்பேட்டை போலீசார், காமராஜை கைது செய்தனர்., அவரிடமிருந்து, 75 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி, 25 ஆயிரம் ரூபாய், சுமோ, இன்டிகா கார்கள், இரண்டு பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

எஸ்.பி., ஜியாவுல்ஹக், தனிப்படை போலீசாரை பாராட்டினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த 8 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் 3 மாவட்டங்களில் பட்டப்பகலில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 வழக்குகள் இவரது கைரேகை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடித்து நிறைய சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார். இவை அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X