இந்தியா

ஆரோவில் நிர்வாகத்திற்கு விரைவில் சேர்மன்; விழுப்புரம் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வானுார் : 'சர்வதேச நகரமான ஆரோவில் நிர்வாகத்திற்கு, விரைவில் சேர்மன் நியமனம் செய்யப்படும்' என லோக்சபாவில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.லோக்சபா மழைக்கால கூட்டத் தொடரில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் சர்வதேச நகரமான ஆரோவில் நிர்வாகம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.குறிப்பாக ஆரோவில் பவுண்டேஷனுக்கு 2020-21, 2021-22 ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி,

வானுார் : 'சர்வதேச நகரமான ஆரோவில் நிர்வாகத்திற்கு, விரைவில் சேர்மன் நியமனம் செய்யப்படும்' என லோக்சபாவில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லோக்சபா மழைக்கால கூட்டத் தொடரில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் சர்வதேச நகரமான ஆரோவில் நிர்வாகம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.குறிப்பாக ஆரோவில் பவுண்டேஷனுக்கு 2020-21, 2021-22 ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, ஒதுக்கீடு குறைக்கப்பட்டதற்கான காரணம், சேர்மன் நியமிப்பதில் காலதாமதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், 'ஆரோவில் பவுண்டேஷனுக்கு 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் 18.20 கோடியும்; 2021-22ம் ஆண்டில் 18.20 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான திட்டங்கள் அங்கே நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, மூலதன செலவு என்ற தலைப்பின் கீழ், செலவு இல்லை என்றும், பொது தலைப்பின் கீழ், குறைவாக செலவாகும் என ஆரோவில் பவுண்டேஷன் தெரிவித்த காரணத்தால் 2020-21ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில், ஆரோவில் பவுண்டேஷனுக்காக 4.58 கோடி ரூபாயாக நிதி குறைக்கப்பட்டது.மேலும், ஆரோவில் பவுண்டேஷனுக்கு முழுநேர செயலாளரை, அண்மையில் கல்வி அமைச்சகம் நியமித்தது.நிர்வாகக் குழுவின் சேர்மனை நியமனம் செய்வதற்கு தகுதியானவரைத் தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X