சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 லட்சம் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு வலை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கடலுார் : மீனவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், முதுநகரைச் சேர்ந்தவர் தேவராஜ், 40; மீனவர். இவர்,கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அவரது மனைவி கிரிஜா, 36; 2 மகன்களுடன் சொந்த ஊரான புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிராயன்பேட்டைக்கு சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக

கடலுார் : மீனவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், முதுநகரைச் சேர்ந்தவர் தேவராஜ், 40; மீனவர். இவர்,கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அவரது மனைவி கிரிஜா, 36; 2 மகன்களுடன் சொந்த ஊரான புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிராயன்பேட்டைக்கு சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கிரிஜாவிற்கு தகவல் கிடைத்தது. அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், கடலுார், முதுநகர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில் ரூ. 5 லட்சம் மதிப்பில் 14 சவரன் நகைகள் திருடு போயிருந்தது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X