மின் கம்பம் மீது லாரி மோதியதால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பம் மீது லாரி மோதியதால் பரபரப்பு

Added : ஜூலை 21, 2021
Share
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் லாரி மோதி மின் கம்பம் முறிந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகளுடன் லாரி வந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், சேலம் நெடுஞ்சாலையில் கடை ஒன்றில் நேற்று இரவு 8:20 மணியளவில் மூட்டைகளை இறக்கியது.பின்னர்,

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் லாரி மோதி மின் கம்பம் முறிந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகளுடன் லாரி வந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், சேலம் நெடுஞ்சாலையில் கடை ஒன்றில் நேற்று இரவு 8:20 மணியளவில் மூட்டைகளை இறக்கியது.பின்னர், லாரியை பின்னால் எடுத்தபோது, மோதியதில் மின்கம்பம் முறிந்து சேதமானது. இதனால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.மின் கம்பிகள் சாலை நடுவே கீழே தொங்கியது. இதனால், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.

உளுந்துார்பேட்டை மின் வாரிய உதவி பொறியாளர் எழிலரசன் தலைமையிலான ஊழியர்கள் மின் கம்பிகளை அகற்றினர்.பின்னர் சேலம் செல்லும் சாலையில் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு 8:45 மணியளவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்தனர்.டி.எஸ்.பி., மணிமொழியன், இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் போக்குவரத்தை சீரமைத்தனர். 20 நிமிடங்களுக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X