சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகார் மனு கொடுக்க வந்தவர் தற்கொலை முயற்சி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்.பி., அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர், தற்கொலைக்கு முயன்றால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் பிரபு, 35; இவர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு விபரம்:திண்டிவனம் - செஞ்சி சாலையில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி

விழுப்புரம் : ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்.பி., அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர், தற்கொலைக்கு முயன்றால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் பிரபு, 35; இவர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு விபரம்:திண்டிவனம் - செஞ்சி சாலையில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருபவரிடம் 40 பேர் மாதாந்திர ஏலச்சீட்டில் பணம் செலுத்தினோம். கடந்த 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளோம்.முதிர்வு அடைந்த நிலையில், எங்களுக்கு சேர வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றி நிதி நிறுவனத்தினர் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து, பொருளாதார பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை விரைவாக மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.மனுவை வாங்கிய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அப்போது மனுதாரர்கள் விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி வாக்குவாதம் செய்தனர்.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பிரபு என்பவர் விஷம் குடித்து, மயங்கி விழுந்தார். அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவத்தால் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X