என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி| Dinamalar

இந்தியா

என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

Added : ஜூலை 21, 2021
Share
புதுச்சேரி : என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து, புதுச்சேரியில் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.நெய்வேலி அனல்மின் நிலையத்தில் (என்.எல்.சி.) பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடி வருகின்றனர்.ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 24ம் தேதி முதல்

புதுச்சேரி : என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து, புதுச்சேரியில் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் (என்.எல்.சி.) பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடி வருகின்றனர்.ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 24ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.இதைத் தொடர்ந்து, புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள, மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

உதவி தொழிலாளர் ஆணையர் சிவக்குமார் தலைமை தாங்கினார். என்.எல்.சி., மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 வரை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தைக்கு பின்பு ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு செயலாளர் சேகர் அளித்த பேட்டி:என்.எல்.சி.யில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றுகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறது.எனவே, வரும் 24ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தோம். முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும், என்.எல்.சி. நிர்வாகம் எங்கள் கோரிக்கையை புறக்கணித்தது.எனவே, அறிவித்தபடி, வரும் 24ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடத்துவது குறித்து, 23ம் தேதி, போராட்டக்குழு கூடி முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X