கர்நாடகா வழக்கு: பதிலடி தருமா தமிழகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா வழக்கு: பதிலடி தருமா தமிழகம்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (13)
Share
சென்னை : ஒப்பந்த விதியை மீறி காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து கர்நாடகா அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்தில் பூம்புகார் என்ற இடத்தில் வங்க கடலில் கலக்கிறது. காவிரி ஆறு கர்நாடகாவில் 320 கி.மீ. துாரமும்

சென்னை : ஒப்பந்த விதியை மீறி காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து கர்நாடகா அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.latest tamil newsகர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்தில் பூம்புகார் என்ற இடத்தில் வங்க கடலில் கலக்கிறது. காவிரி ஆறு கர்நாடகாவில் 320 கி.மீ. துாரமும் தமிழகத்தில் 416 கி.மீ. துாரமும் பயணிக்கிறது.கர்நாடகாவில் குடகு ஹசன் மைசூரு மாண்டியா பெங்களூரு சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களும் தமிழகத்தில் தர்மபுரி சேலம் ஈரோடு நாமக்கல் கரூர் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலுார் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களும் காவிரியால் பயன் பெறுகின்றன.

கடந்த 1870 முதல் மைசூரு - சென்னை மாகாணங்கள் இடையே காவிரி நதிநீர் தொடர்பான பிரச்னை நீடித்து வந்துள்ளது.அப்போதே காவிரியில் நீர் சேமிப்பு திட்டங்களை மைசூரு அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கு சென்னை மாகாணம் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக 1890ல் முதல் பேச்சு நடந்தது; உடன்பாடு ஏற்படவில்லை.இறுதியாக 1892ல் ஊட்டியில் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சென்னை மாகாணத்தின் அனுமதியின்றி மைசூரு மாகாண அரசு காவிரி நீரை தடுக்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்த கூடாது.


latest tamil newsஆனால் ஹேரங்கி ஹேமாவதி கபினி கே.ஆர்.எஸ். ஆகிய நான்கு அணைகளை கர்நாடக அரசு கட்டியுள்ளது.தமிழகத்தில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மட்டுமே கட்டப்பட்டுள்ளது. தற்போது மேகதாது அணை கட்டுவதற்கும் கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.இந்நிலையில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம் கடலுார் நாகப்பட்டினம் கரூர் அரியலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த நிரந்தர தடை விதிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஒப்பந்தப்படி தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடக அரசு நீரை தடுக்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது. தமிழகம் நீரை சேமிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள மைசூரு - சென்னை மாகாண ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.கடலில் கலந்து வீணாகும் நீரை மட்டுமே தமிழகம் சேமிக்கிறது. இதனால் கர்நாடகாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என 2018ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


latest tamil newsஇந்த தீர்ப்பை மட்டுமே கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் மைசூரு - சென்னை மாகாண ஒப்பந்தத்தை மீறி தமிழக அரசு மீது கர்நாடகா வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்விஷயத்தில் கர்நாடகாவிற்கு பதிலடி தரும் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து துவங்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X