பொது செய்தி

இந்தியா

இந்தியர்களின் சுவிஸ் டிபாசிட்; பார்லிமென்டில் அரசு விளக்கம்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: சுவிட்சர்லாந்து அரசுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி இந்தியர்களின் 'டிபாசிட்' விபரங்கள் பெறப்படுவதாக, மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.பிரதிபலிப்புராஜ்யசபாவில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசியதாவது:இந்தியா, சுவிட்சர்லாந்து இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தப்படி நிதி சார்ந்த தகவல்களை இரு
Indians, Swiss Banks, black money, Pankaj Chaudhary

புதுடில்லி: சுவிட்சர்லாந்து அரசுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி இந்தியர்களின் 'டிபாசிட்' விபரங்கள் பெறப்படுவதாக, மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


பிரதிபலிப்பு


ராஜ்யசபாவில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசியதாவது:இந்தியா, சுவிட்சர்லாந்து இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தப்படி நிதி சார்ந்த தகவல்களை இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றன. சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.


latest tamil newsஇந்த டிபாசிட், கறுப்பு பணம் அல்ல என்றும் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இது குறித்து சுவிஸ் தேசிய வங்கி, சமீபத்தில் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், தேசிய வங்கியின் புள்ளிவிபரங்கள் ஒட்டுமொத்த சுவிஸ் வங்கித் துறையின் ஆண்டு நிதிநிலை அறிக்கையை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுவிஸ் வங்கியில் டிபாசிட் செய்தாலும், அந்த வங்கி உள்நாட்டில்தான் இயங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல; வேறு நாடுகளில் கூட இயங்கலாம். எனவே சுவிஸ் வங்கித் துறையின் நிதியாண்டு டிபாசிட் விபரத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் டிபாசிட் தொடர்பான ஆய்வுக்கு பயன்படுத்துவது சரியாக இருக்காது, என, சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்து உள்ளது.


பரஸ்பரம்


நிதி, வரி உள்ளிட்டவை தொடர்பான விபரங்களை பரஸ்பரம் பெறுவதற்கு சுவிஸ் அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, தேவைப்படும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
21-ஜூலை-202116:08:56 IST Report Abuse
Siva Subramaniam Any country, where foreign funds are allowed, ( Saving by other nationalities) will NEVER disclose the information. After all, the hoarding country's economy solely depends on this kind of black wealth.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூலை-202115:43:15 IST Report Abuse
தமிழவேல் இதுவரைக்கும் வந்த "கருப்புப்பண" லிஸ்டை வெளியிட்டால் என்ன ?
Rate this:
Cancel
R MANIVANNAN - chennai,இந்தியா
21-ஜூலை-202113:48:11 IST Report Abuse
R MANIVANNAN சரியான விளக்கம் சபாஷ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X