தமிழ்நாடு

'டிக்கெட்... டிக்கெட்...': இலவச பயணத்தால் தொடரும் சோதனை: 'மெமோ'க்களால் அலறும் பஸ் நடத்துனர்கள்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை : மதுரையில் இலவச பஸ்களில் பெண்கள் 'டிக்கெட்' எடுக்காமல் பயணித்தால் நடத்துனர்களுக்கு 'மெமோ' கொடுக்கப்படுகிறது. இது போக்குவரத்து ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நகரில் 20 சதவீதம், மாவட்ட பகுதிகளில் 40 சதவீதம் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெண்கள் காத்திருந்து பயணிப்பதால் கூட்டம் அதிகமாகவே உள்ளது. பயணிகளுக்கு கட்டணம்,
'டிக்கெட்... டிக்கெட்...': இலவச பயணத்தால் தொடரும் சோதனை: 'மெமோ'க்களால் அலறும் பஸ் நடத்துனர்கள்

மதுரை : மதுரையில் இலவச பஸ்களில் பெண்கள் 'டிக்கெட்' எடுக்காமல் பயணித்தால் நடத்துனர்களுக்கு 'மெமோ' கொடுக்கப்படுகிறது. இது போக்குவரத்து ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நகரில் 20 சதவீதம், மாவட்ட பகுதிகளில் 40 சதவீதம் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெண்கள் காத்திருந்து பயணிப்பதால் கூட்டம் அதிகமாகவே உள்ளது. பயணிகளுக்கு கட்டணம், மாற்றுத்திறனாளி, இலவசம் என மூவகை டிக்கெட்டுகள் கொடுக்கப்படுகின்றன. அவை ஒரே கலரில் உள்ளதால் கூட்ட நெரிசலில் 'டிக்கெட்' கொடுப்பது நடத்துனர்களுக்குசவாலாக உள்ளது.

அவர்கள் கூறியதாவது: அரசு பஸ்களில் 'மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை' என சிவப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளது. இதே அளவு இதே கலரில் 'அரசு பஸ்சில் நோட்டீஸ் ஒட்டத் தடை. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற 'ஸ்டிக்கரும்' உள்ளது. இதை கவனிக்காத பெண்கள் இலவச பஸ் என நினைத்து கட்டண பஸ்களில் ஏறி 'டிக்கெட்' எடுக்காமல் வாக்குவாதம் செய்கின்றனர். 'செக்கிங்' வந்தால் நடத்துனருக்கு 'மெமோ' கொடுக்கின்றனர். இதுவரை 40 நடத்துனர்கள் 'மெமோ' பெற்றுள்ளோம். ஏற்கனவே 'பேட்டா' குறைந்துள்ள நிலையில் இதுபோன்ற சம்பவம் தினமும் எங்களுக்கு சோதனையாக உள்ளது. கலர் குழப்பத்தை தவிர்க்க இலவசத்திற்கு வெள்ளை கலர் 'டிக்கெட்' வழங்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
26-ஜூலை-202111:17:05 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அறிவாளிகள் சட்டம் போடணும் . மற்றவர்கள் போட்டால் இப்படித்தான். தவிர இலவச பிச்சைக்கு ஓடுவதில் தமிழகத்தை மிஞ்ச ஆளில்லை .
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-ஜூலை-202119:35:42 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த திட்டம் மிகவும் அபத்தம். நிறைய பெண்கள் சும்மா ஊர் சுற்றுகின்றனர்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இதைத்தான் பேட்டெண்ட் சட்டம் என்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X