பொது செய்தி

இந்தியா

தகவல் தொழில்நுட்ப துறையில் 1.1 லட்சம் வேலைவாய்ப்புகள்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளன.குறிப்பாக, டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல்., டெக் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே, மொத்தம் 1.1 லட்சம் புதியவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளன. கொரோனா பாதிப்புகளை அடுத்து, அனைத்து வணிகங்களும் டிஜிட்டல்மயமாவதில் ஆர்வம் காட்டி வருவதால்,
தகவல் தொழில்நுட்ப துறையில் 1.1 லட்சம் வேலைவாய்ப்புகள்

புதுடில்லி: நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளன.

குறிப்பாக, டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல்., டெக் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே, மொத்தம் 1.1 லட்சம் புதியவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளன. கொரோனா பாதிப்புகளை அடுத்து, அனைத்து வணிகங்களும் டிஜிட்டல்மயமாவதில் ஆர்வம் காட்டி வருவதால், இத்துறையின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் 35 ஆயிரம் புதியவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், இந்நிறுவனம் 21 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியது.


latest tamil news


விப்ரோ, நடப்பு நிதியாண்டில் 12 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகமாகும். எச்.சி.எல்., டெக் நிறுவனம், 20 - 22 ஆயிரம் பேரை பணியமர்த்த இருப்பதாக தெரிவித்து உள்ளது.டி.சி.எஸ்., நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 40 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து உள்ளது. இந்த நான்கு நிறுவனங்களும், ஜூன் காலாண்டில் மட்டும், 48 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பணியமர்த்தி உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
21-ஜூலை-202111:39:42 IST Report Abuse
Rajarajan கணினி மென்துறை நிறுவனங்கள், புதுசா வேலை கொடுக்கறது இருக்கட்டும். வருஷா வருஷம், எத்தனை பேரை வீட்டுக்கு அனுப்பறீங்க, அந்த லிஸ்ட்டை தாங்க சார்.
Rate this:
Cancel
21-ஜூலை-202110:35:40 IST Report Abuse
தமிழ் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு பெற்று மீண்டால் நல்லது.
Rate this:
Cancel
N V VENKAT - Chennai,இந்தியா
21-ஜூலை-202109:56:55 IST Report Abuse
N V VENKAT 2030ல குடும்ப சொத்து எவ்வளவு வரவேண்டும்? அதற்கு ஏறறாற்போல் முதலீடுகள் வரவேற்கப்படுகிறதோ? நாட்டுக்கு நன்மை, குடும்பத்திற்கு மிக நன்மை சபாஷ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X