பொது செய்தி

தமிழ்நாடு

"தமிழகத்திற்கு அவர் பெற்று தந்த நீதி நிலைநாட்டப் படாமல் இருப்பதால் தான் தொல்லை தொடர்கிறதா..."

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருந்ததால், முதல்வராக இருந்த ஜெ., நீதிமன்றத்திற்கு சென்று, தமிழகத்திற்கு நீதியை பெற்றுத் தந்தார்.- அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி'தமிழகத்திற்கு அவர் பெற்றுத் தந்த நீதி, இன்னமும் நிலைநாட்டப்படாமல் இருப்பதால் தான், அவ்வப்போது தொல்லை தொடர்கிறதா...' என, கேட்கத் தோன்றும் வகையில் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர்
பேச்சு_பேட்டி_அறிக்கை, அதிமுக, முனுசாமி

காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருந்ததால், முதல்வராக இருந்த ஜெ., நீதிமன்றத்திற்கு சென்று, தமிழகத்திற்கு நீதியை பெற்றுத் தந்தார்.
- அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி


'தமிழகத்திற்கு அவர் பெற்றுத் தந்த நீதி, இன்னமும் நிலைநாட்டப்படாமல் இருப்பதால் தான், அவ்வப்போது தொல்லை தொடர்கிறதா...' என, கேட்கத் தோன்றும் வகையில் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேட்டி



மக்கள் தொகை அடிப்படையில், தமிழகத்திற்கு முதல்வர் தடுப்பூசிகளை பெற வேண்டும் என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., கூறுகிறார். மக்கள்தொகை அடிப்படையில், பிரதமர் தடுப்பூசிகள் தர வேண்டும் என்று சொல்ல மாட்டார். அவரிடம் அவ்வளவு பயம் இப்போதும்.
- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


'இதெல்லாம் பயமா... மார்க்சிஸ்ட்களுக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே எப்படி உறவு இருக்கிறதோ, அதுபோன்றது தான், ஓ.பி.எஸ்.,சுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள உறவு...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை



latest tamil news


விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த, அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்த ஆண்டும், விநாயகர் சிலை ஊர்வலத்தை ஹிந்து ஒற்றுமை திருவிழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
- ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்


'பிற ஆண்டுகள் எப்படியோ, இந்த ஆண்டு நீங்கள் விரும்புவதை தமிழக அரசு செய்யாது என்றே நம்பலாம். ஏனெனில், அந்த அளவுக்கு ஹிந்துக்கள் மீது நல்லெண்ணம் கொண்டது இந்த அரசு...' என, சொல்லத் தோன்றும் வகையில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி



பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கான ஆலோசனைக் கூட்டம், 2 மணி 40 நிமிடங்கள் நடந்தது. இதில் பிரதமர் மோடி 9 நிமிடங்கள் பங்கேற்றார். உறுப்பினர்கள் பேசுவதை 3 நிமிடங்கள் கேட்டார். புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு 2 நிமிடங்கள் ஆனது. பிரதமர் பேசியதோ 4 நிமிடங்கள் மட்டுமே.
- தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா


'கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, அந்த, 4 நிமிடங்கள் கேட்டுக் கொண்டார். ஆனால், நடந்தது என்ன... அதனால் தான், இதுபோன்ற கூட்டங்களில் அவர் நீண்ட நேரம் இருப்பதில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை



அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அ.தி.மு.க.,வினர் மீது, தி.மு.க.,வினர் பொய் வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர். பத்தாண்டு ஆட்சியில் நாம் அவ்வாறு போட்டதில்லை. எனினும், அ.தி.மு.க.,வினரை கட்சி காப்பாற்றும். கவலைப்பட வேண்டாம்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி


'இப்படி எல்லாம் சொன்னால் தான், கட்சியினர் உற்சாகமாக இருப்பர் என்பதை தெரிந்து வைத்துள்ளீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
21-ஜூலை-202112:54:44 IST Report Abuse
Gopinathan S அதனால் தான், இதுபோன்ற கூட்டங்களில் அவர் நீண்ட நேரம் இருப்பதில்லை-முட்டு கொடுப்பதற்கு மிக சிறந்த உதாரணம் இதுதான்....
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
21-ஜூலை-202112:53:28 IST Report Abuse
Gopinathan S """"""ஏனெனில், அந்த அளவுக்கு ஹிந்துக்கள் மீது நல்லெண்ணம் கொண்டது இந்த அரசு.."""""""விஷமத்தனமான கருத்து....
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
21-ஜூலை-202112:48:21 IST Report Abuse
Suppan பிரதமர் எவ்வளவு மணி நேரம் பேசினார் என்பது முக்கியமல்ல. என்ன பேசினார் என்பதே முக்கியம். என்னதான் பேசினாலும் பாராளுமன்றத்தில் கூட்டம் நடத்த விடாமல் அமளிதானே செய்தீர்கள். உங்கள் உள்நோக்கம் என்ன. மசோதாக்கள் பற்றி விவாதம் நடக்கக் கூடாது. அவை எப்படியும் நிறைவேறிவிடும். பின்னர்.. ஆஹா விவாதங்களே இல்லாமல் மோதி அரசு சட்டங்களை நிறைவேற்றிவிட்டது என்று கூச்சல் போடலாம். நடத்துங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X