பொது செய்தி

இந்தியா

921 சுகாதார பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு: மத்திய அரசு தகவல்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'கடந்த 2020ம் ஆண்டிலிருந்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என, எத்தனை பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது' என, மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்து உள்ளதாவது: பிரதான்

புதுடில்லி: 'கடந்த 2020ம் ஆண்டிலிருந்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என, எத்தனை பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது' என, மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் கோவிட் தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பாதிக்கப்படும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டம் 2021, ஏப்ரல் 24ம் தேதி முதல் கூடுதலாக 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சுகதாாரப் பணியாளர்களில் உயிரிழந்தவர்களில் எத்தனைபேர் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அவர்கள் வகித்த பதவி வாரியான கணக்கு அரசிடம் இல்லை. ஆனால், 2021, ஜூலை 15ம் தேதி வரை, கோவிட் தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட் 921 பேருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பவார் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-ஜூலை-202112:30:41 IST Report Abuse
Ramesh Sargam இந்த இழப்பீட்டு பணம் உண்மையாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு சென்றடைந்தால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். இதிலும் தில்லு முள்ளு செய்து, நடுவில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆட்டைபோடாமல் இருந்தாலும் மக்கள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜூலை-202111:35:43 IST Report Abuse
Lion Drsekar இந்த தொகையையாவது மத்திய அரசு தானாக நேரில் மத்திய அமைச்சர்களை வைத்துக்கொண்டு அவர்கள் வழியாக கொடுத்தால் யார் கொடுத்தார்கள் என்று தெரியும், இல்லையென்றால் தேர்தலுக்காக கொடுப்பது போல் ஆங்காங்கு இருக்கும் அமைப்புகள் கொடுத்து பெயர் வாங்கிக்கொள்ளும், என்னதான் பாய்திருந்தாலும் சின்னங்களைப் பார்த்துதான் ஒட்டு போடுவது என்பதாகிப்போனதால் இதுவும் ஒரு சடங்காகும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
21-ஜூலை-202111:12:05 IST Report Abuse
R. Vidya Sagar சாதா மக்களுக்கு சட்டப்படி நான்கு லட்சம் கொடுக்க மட்டும் ஏனோ தயக்கம்.
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-202112:08:05 IST Report Abuse
Janarthanan கீழே மற்றுமொரு செய்தில் "கடைகளில் நெரிசல் தடுக்க செய்ய வேண்டியது என்ன" உள்ள போட்டோவை பாருங்க எத்னை மக்கள் முகக்கவசம் இல்லாமல் சுற்றுகிறார்கள் என்று ??? இந்த பொறுப்பற்ற மக்களுக்கு பொறுப்பான மக்களின் வரியை கொண்டு ஏன் இழப்பீடு வழங்க வேண்டும் ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X