921 சுகாதார பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு: மத்திய அரசு தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

921 சுகாதார பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு: மத்திய அரசு தகவல்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: 'கடந்த 2020ம் ஆண்டிலிருந்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என, எத்தனை பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது' என, மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்து உள்ளதாவது: பிரதான்

புதுடில்லி: 'கடந்த 2020ம் ஆண்டிலிருந்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என, எத்தனை பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது' என, மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் கோவிட் தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பாதிக்கப்படும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டம் 2021, ஏப்ரல் 24ம் தேதி முதல் கூடுதலாக 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சுகதாாரப் பணியாளர்களில் உயிரிழந்தவர்களில் எத்தனைபேர் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அவர்கள் வகித்த பதவி வாரியான கணக்கு அரசிடம் இல்லை. ஆனால், 2021, ஜூலை 15ம் தேதி வரை, கோவிட் தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட் 921 பேருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பவார் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X