சீனாவில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த கனமழை; 25 பேர் பலி

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
பீஜிங்:சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில், 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததில் இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.அண்டை நாடான சீனாவின், மத்திய ஹெனான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் 46 செ.மீ.,
China, Floods, Dead, சீனா, கனமழை, வெள்ளம்

பீஜிங்:சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில், 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததில் இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.அண்டை நாடான சீனாவின், மத்திய ஹெனான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் 46 செ.மீ., மழை பொழிந்தது. இதில், மத்திய ஹெனான் மாகாணம் மற்றும் அதன் தலைநகர் ஸெங்சோ ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. ஸெங்சோ நகரில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.


latest tamil news


ரயில் பயணியர் பலரும் சுரங்கத்தை விட்டு வெளியேற முடியாமல் கழுத்தளவு தண்ணீரில் உள்ளே சிக்கினர். இவர்களில் 12 பேர் இறந்தனர். மாகாணம் முழுவதும் பஸ், ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.ஹெனான் மாகாணத்தின், இச்சுவான் என்ற இடத்தில் உள்ள அணையில், 20 மீட்டர் துாரத்திற்கு பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அணை எந்த நேரத்திலும் உடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news


இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக, ஹெர்னான் மாகாணத்துக்கு, சீன ராணுவத்தை அந்நாட்டு அதிபர் ஷீ ஜிங்பிங் அனுப்பி வைத்துள்ளார்.சீனாவில், 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவில், பெரும் மழை கொட்டி தீர்த்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-202105:54:20 IST Report Abuse
ராஜா சீனத்தின் அழிவு காலத்தின் கட்டாயம். இந்தியா எழும் சீனா விழும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-ஜூலை-202123:36:11 IST Report Abuse
மலரின் மகள் அவர்கள் அடுத்த ஐம்பது ஆண்டுகள் நூறாண்டுகள் என்று திட்டமிடுவார்கள். ஆனால் வரும் பிரச்சினைகளை அறியமாட்டார்கள். உலகில் அதிக அளவில் அணைகளை காட்டியது சீனாதான். எதற்காகா? விவசாயத்திற்காகவா என்றால் முழுதும் அல்ல. வெள்ளம் திசைமாறுவது அணைகள் திசை மாறுவது என்று இருப்பதை தடுத்து நிறுத்தி அதை வேண்டும் வண்ணம் திறந்து விட்டு வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பித்து கொள்வதற்காக என்று சொல்லலாம். அனால் சீனா சொல்வதோ தொடர்ந்து அனைத்து காலங்களிலும் ஹைடிராலிக் மின்சாரம் தயாரிப்பதற்கு என்று சொல்கிறது. உலகின் பல வல்லுநர்கள் எச்சரித்து கொண்டே வந்திருக்கிறார்கள் அணைகள் ஒவ்வொன்று பல அணுகுண்டுகளை சமம் என்று. அதை அவர்கள் கேட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. அதன் விளைவுகள் தான் இது. சீனா மற்ற தேசத்தின் மீது யுத்தம் செய்தால் ஒரு ராக்கெட் போதும் அவர்களின் அணைகளை தகர்ப்பதற்கு, அவ்வளவு தான் மற்றத்தை ஜலசக்தி பார்த்து கொள்ளும். நாணில் ஏற்றப்பட்ட அம்பு போலத்தான் அவர்களின் அணைகள் அனைத்தும் தயாராக இருக்கிறது உடைத்து கொண்டு அழிவை அள்ளித்தருவதற்கு. அவர்களின் ஒரு நூறு பெரிய அணைகளை ஏவுகணை கொண்டு தாக்கினால் போதும், சீனா முழுதும் கற்காலத்திற்கு சென்றுவிடும். ஜலசக்தி ஆயுதம் மற்றும் அதனடுத்து வரும் நோய்கிருமிகளால் பரவும் வியாதிகள் இயற்கையான பயோவார் ஆகா இருக்கும் அங்கே. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்கள். இயற்கையை மதித்து நன்றி பாராட்டி அஞ்சி அதையே வணங்கி தான் மனித குலம் பல ஊழிகளால புவியில் நிலைத்திருக்கிறது என்பதை உணராதவர்கள். மதம் உண்டானது அதன் மூலமாகவே. இறை பக்தி தேவை இயற்கை சீரழிவில் இருந்து மனிதகுலம் பிழைத்திருப்பதற்கு.
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
26-ஜூலை-202105:53:45 IST Report Abuse
கௌடில்யன்குத்தகைக்கு எடுத்து கருத்து மழை பொழியறீங்க .....
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-ஜூலை-202123:28:06 IST Report Abuse
மலரின் மகள் உலகின் அணைவுடைப்பின் சராசரிவிகித்ததை விட நான்கு மடங்கு அணையுடைப்பு ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேசம் சீனா. கட்டப்பட்ட அணைகள் வலுவற்றவை பல இருக்கின்றன. அறுபதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட வருடங்களில் கட்டப்பட்ட அனைத்து அணைகளும் உடைந்து விடும் தருவாயில் இருக்கிறது. சில அணைகளை அவர்கள் வெடி வைத்து தகர்கிறார்கள். மலைமட்டும் பொலிந்து வெள்ளம் பெருகியதா அல்லது அதனுடன் கூடவே அணைகளும் உடைந்ததனால் பெருவெள்ளம் வந்ததா என்ற செய்திகள் ஊகத்தின் அடிப்படையிலும் உள்ளார்ந்த சிந்தனையுடனும் அறிந்து கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X